ஹூவாய் நிறுவனம் அதன் முன்னணி தயாரிப்பான மேட் 20 ப்ரோவினை வெளியிட தயாரகி உள்ளது
லண்டனில் கடந்த மாதம் நடைபெற்ற உலகளாவிய நிகழ்ச்சி ஒன்றில் ஹூவாய் மேட் 20 ப்ரோ அறிமுகப்படுத்தப்பட்டது.
ஹூவாய் நிறுவனம் அதன் முன்னணி தயாரிப்பான மேட் 20 ப்ரோவினை வெளியிட தயாரகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முதல்முறையாக 7என்.எம் ஹாய்சிலிகான் கிரின் 980 SoC இயங்குகிறது. ஹூவாய் மேட் சீரிஸ்கள் இந்தியாவில் அறிமுகமாவது இதுவே முதல் முறையாகும். அந்நிறுவனம் ஊடகத்தினருக்கு அறிமுக விழா அழைப்பினை கொடுத்துள்ளது. இருப்பினும், அதில் எந்த பொருள் அறிமுகமாகிறது என்பது குறித்த தகவல்கள் இல்லை. கடந்த மாதத்தில் ஒயர்லெஸ் சார்ஜரை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்தது.
6ஜிபி ரேம்/ 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஹூவாய் மேட் 20 ப்ரோவின் ஆரம்ப விலை EUR 1,049(ரூ.88,400). 8ஜிபி ரேம்/256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ஹூவாய் தள பட்டியலில் உள்ளது. அதன் விலை குறிப்பிடப்படவில்லை. இதுவும் பிற ஹூவாய் போன்களை போன்றதே, இந்தியாவில் ஹூவாய் மேட் 20 ப்ரோ பிரத்தியோகமாக அமேசான் தளத்தில் விற்பனையாகிறது.
மேட் 20 ப்ரோ ஆண்ட்ராய்டு பையை அடிப்படையாகக் கொண்டு EMUI 9.0 சாப்ட்வேரில் இயங்குகிறது. 6.39 இன்ச் QHD+(1440x3120 pixels) ஓஎல்இடி டிஸ்பிளே 19:5:9 என்ற வீதத்தில் இருக்கும். நானோ மெம்மரி கார்டினை பயன்படுத்திக் கொள்ளலாம். மேட் 20 ப்ரோவின் பின்புறத்தில் மூன்று கேமிராக்கள் உள்ளன. 24 மெகா பிக்சல் செல்ஃபி கேமிரா உள்ளது. இதில் 4,200 mAh பேட்டரி உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple's Upgraded AirTag to Offer Improved Tracking Features; HomePod Mini to Feature New Chip: Report