இந்தியாவில் ஜூன் 11 அன்று இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது.
ஜூன் 11-ஆம் தேதி அறிமுகமாகவுள்ள ஹானர் 20 போன்கள்.
ஹானர் நிறுவனம், செவ்வாய்க்கிழமை அன்று, ஹானர் 20 தொடரில் மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்தது. லண்டனில் நடந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன்களில், மிகுந்த பிரீமியம் போன் ஹானர் 20 Pro. இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் 4 பின்புற கேமராக்கள் கொண்டு வெளியாகவுள்ளது. அதுமட்டுமின்றி, 32 மெகாபிக்சல் முன்புற கேமராவையும் கொண்டுள்ளது. 6.26 இன்ச் திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 4000mAh பேட்டரி அளவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கிரின் 980 ப்ராசஸரை கொண்டுள்ளது. இந்த நிகழ்வில் ஹானர் 20 மற்றும் ஹானர் 20 லைட் என மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஹானர் 20 Pro-வின் துவக்க விலை 599 யூரோக்கள். இதன் இந்திய மதிப்பு சுமார் 46,500 ரூபாய். இந்தியாவில் ஜூன் 11 அன்று இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரவுள்ளது. கருப்பு (Phantom Black) மற்றும் நீலம் (Phantom Blue) என இரு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும்.
ஹானர் 20 Pro: சிறப்பம்சங்கள்!
6.26 இன்ச் FHD+ (1080x2340 பிக்சல்கள்) கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் பை அமைப்பை கொண்டு செயல்படுகிறது. ஹோல்-பன்ச் திரை(Hole-Punch Display) கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் திரைக்கும் உடலுக்கும் உள்ள விகிதம் 91.7 சதவிகிதம். இந்த ஸ்மார்ட்போன் 7nm கிரின் 980 (Kirin 980) ப்ராசஸரை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்போனின் பின்புறத்தில் மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. முதலில், 48 மெகாப்க்சல் அளவிலான முதன்மை கேமரா. வைட் ஆங்கிள் கேமராவாக 16 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, இதில் 117 டிகிரி வரை விரிந்த படங்களை எடுக்கலாம். 8 மெகாபிக்சல் அளவிலான தொலைதூரப்படங்களை எடுக்கும் கேமரா உள்ளது. இதில் 3x ஆப்டிகல் ஜூம், 5x ஹைபிரிட் ஜூம், மற்றும் 30x டிஜிட்டல் ஜூம் செய்து கொள்ளலாம். நான்காவதாக, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
ஹோல்-பன்ச் திரை கொண்ட இதன் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
![]()
4000mAh பேட்டரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனிற்கு 22.5W சார்ஜர் வழங்கப்படவுள்ளது. இதில் 30 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 50 சதவிகிதம் பேட்டரி நிரம்பிவிடும். 4G வசதி, வை-பை, ப்ளூடூத் v5 வசதி உள்ளது. 154.60x73.97x8.44mm என்ற அளவுகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 182 கிராம் எடை உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Reno 16 Series Early Leak Hints at Launch Timeline, Dimensity 8500 Chipset and Other Key Features