Photo Credit: Weibo/ ichangezone
மே 21 ஆம் தேதி, ஹானர் 20 ப்ரோ ஸ்மார்ட் போன் உலக அளவில் வெளியாக உள்ளது. ஆனால், அந்த போன் குறித்த ஒரு புகைப்படம் தற்போது கசிந்து பரபரப்பை கிளப்பியுள்ளது. லீக் ஆன அந்தப் படம் மூலம், ஹானர் 20 ப்ரோ-வின் பின்புறத்தில் 4 கேமராக்கள் இருக்கும் எனத் தெரிகிறது. அதேபோல பின்புற பேனலில் க்ரேடியன்ட் ஃப்னிஷ் இருக்கும் என்றும் தெரிகிறது. முன்னதாக ஹானர் 20 ப்ரோ குறித்து லீக் ஆன ஒரு புகைப்படத்தில், பின்புறத்தில் 3 கேமராக்கள்தான் இருந்தன. தற்போது லீக் ஆகியுள்ள இந்தப் படத்தில் போனின் பின்புறத்தில் 4 கேமராக்கள் இருப்பது தெளிவாக தெரிகிறது.
இந்தப் படம் உண்மையிலேயே ஹானர் 20 ப்ரோ போனுடையதா என்பது தெரியவில்லை. ஆனால், பின்புறத்தில் இருக்கும் முதன்மை கேமரா சென்சார், முன்னதாக ஹூவேய் P30 ப்ரோ -வில் இருந்தது போல பெரிஸ்கோப் சென்சார் என்பது தெரிகிறது. அதேபோல ஹானர் 20 ப்ரோ-வில் 48 மெகா பிக்சல் கொண்ட ஒரு கேமராவும் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சோனி IMX600 இமேஜ் சென்சாரை இதற்காக ஹானர் 20 ப்ரோ-வில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூடுதல் தகவல் கூறப்படுகிறது.
இவையல்லாமல் போனில் 20 மெகா பிக்சல் வைட்-ஆங்கில் லென்ஸ், 8 மெகா பிக்சல் டெலி போட்டோ லென்ஸ் மற்றும் ToF கேமரா ஆகியவை இருக்கலாம்.
மற்றப்படி ஹானர் 20 ப்ரோ குறித்து இதுவரை நமக்குக் கிடைத்த தகவல்படி, க்ரின் 980 எஸ்.ஓ.சி, 8 ஜிபி ரேம், 256 ஜிபி சேமிப்பு வசதி, 3,650 எம்.ஏ.எச் பேட்டரி, 22.5w ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகளை பெற்றிருக்கக்கூடும். இதைத் தவிர கேமிங்+, லிங்க் டர்போ, GPU டர்போ உள்ளிட்ட வசதிகளையும் ஹானர் 20 ப்ரோ-வில் இருக்கலாம். இந்த போனின் விலை 31,100 ரூபாயிலிருந்து ஆரம்பிக்க வாய்ப்புள்ளது. ஹானர் 20 மற்றும் ஹானர் 20 லைட் போன்களுடன் ஹானர் 20 ப்ரோ மே 21 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்