Photo Credit: HMD
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது HMD Pulse Pro செல்போன் பற்றி தான்.
HMD Pulse Pro அதிகாரப்பூர்வமாக ஆண்ட்ராய்டு 15 மென்பொருள் புதுப்பிப்பைப் பெறும் நோக்கியா ஸ்மார்ட்போன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செல்போன் ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆக்டா கோர் யூனிசாக் T606 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இப்போது ஆண்ட்ராய்டு 14 மூலம் இந்த செல்போன் இயங்குகிறது. சமீபத்திய மென்பொருள்அப்டேட்டில் செயல்திறன் அதிகரிப்பு, பேட்டரி மேம்பாடுகள், பாதுகாப்பு மேம்படுத்தல்கள் மற்றும் மேம்பட்ட அறிவிப்புக் கட்டுப்பாட்டு அமைப்பு போன்றவை Android 15 அம்சங்களாக உள்ளது.
HMD Pulse Pro ஆண்ட்ராய்டு 15 அப்டேட் தோராயமாக 3.12ஜிபி அளவில் உள்ளது. பயன்பாட்டு வெளியீட்டு வேகம், மேம்படுத்தப்பட்ட பேட்டரி ஆயுள் மேலாண்மை உள்ளிட்ட கணினி செயல்திறனை இது வழங்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இது சிறப்பான பவர் மேனேஜ்மென்ட் சிஸ்டத்தைப் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பேட்டரி ஆயுளை நீட்டிக்க தேவையான முறைகளை அறிந்து அதற்கேற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது. Android 15 புதுப்பிப்பைத் தொடர்ந்து HMD Pulse Pro மிகவும் மேம்பட்ட செல்போன் மாடலாக மாற்றம் பெறும். டிசம்பருக்கான கூகிளின் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பும் இதனுடன் வருகிறது. HMD Pulse Pro தவிர இன்னும் சில செல்போன் மாடல்களுக்கும் இந்த அப்டேட் கிடைக்கிறது. அவை அடுத்து பார்க்கலாம்.
6.59-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவரும் இந்த எச்எம்டி பல்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் 1480×720 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் எச்எம்டி பல்ஸ் ப்ரோ மாடல் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது எச்எம்டி பல்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன இந்த எச்எம்டி பல்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்