Photo Credit: HMD
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது HMD Fusion செல்போன் பற்றி தான்.
HMD Fusion செல்போன் இந்த ஆண்டு நடந்த IFA 2024 விழாவில் வெளியிடப்பட்டது. கைபேசியை ஸ்மார்ட் அவுட்ஃபிட்ஸ் எனப்படும் Smart Dress உடன் இணைக்க முடியும். Snapdragon 4 Gen 2 SoC சிப், 108 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா அமைப்பு மற்றும் 50 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டரைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே HMD பல்ஸ், பல்ஸ்+ மற்றும் பல்ஸ் ப்ரோ ஆகிய 3 செல்போன் மாடல்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த வரிசையில் HMD Fusion செல்போனும் இணைகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.24,000 இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
HMD Fusion செல்போன் உடன் சேர்ந்து வயர்லெஸ் மாடல் மற்றும் கேமிங் ஸ்மார்ட் ஆடைகள் இந்த ஆண்டின் இறுதியில் கிடைக்கும். இது ஆண்ட்ராய்டு 14 மூலம் இயங்குகிறது. இரண்டு வருட OS அப்டேட் கிடைக்கும். மூன்று வருட செக்யூரிட்டி அப்டேட் வரும். இது 6.56-இன்ச் HD+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 20:9 விகிதத்துடன், 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 600 nits உச்ச பிரகாசத்துடன் இருக்கும். Snapdragon 4 Gen 2 சிப்பில் 8GB வரை ரேம் மற்றும் அதிகபட்சமாக 256GB வரை மெமரி வசதியுடன் வருகிறது. மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தி மெமரியை 1TB வரை விரிவாக்கலாம்.
HMD Fusion செல்போனை ஸ்மார்ட் ஆடைகளுடன் இணைக்கலாம். ஸ்மார்ட் ஆடைகளை இணைக்க ஆறு பின்கள் இருக்கிறது. Flashy அவுட்ஃபிட் மற்றும் பின் கேமராக்கள் இரண்டிலும் பயன்படுத்த ஒரு உள்ளமைக்கப்பட்ட ரிங் லைட் பொருத்தப்பட்டுள்ளது. சாதனக் கட்டுப்பாடுகள் மூலம் மூட் லைட்டிங் மற்றும் கேமராவை கட்டுப்படுத்த பயனர்களை இது அனுமதிக்கிறது. இது IP68 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. அவசரகால (ICE) பொத்தானையும் கொண்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரையில் எச்எம்டி ஃப்யூஷன் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 108 மெகாபிக்சல் மெயின் சென்சார் கேமரா உள்ளது. முன்பக்கத்தில், இது 50-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சம் உள்ளது.
புளூடூத் 5.2, GPS/AGPS, GLONASS, BDS, Galileo, OTG, USB Type-C போர்ட் மற்றும் WiFi 802.11a/b/g/n/ac/ax ஆகிய இணைப்பு ஆப்ஷன்கள் உள்ளது. iFixit கிட் பயன்படுத்தும் பயனர்களால் எளிதாக மாற்ற முடியும். கைபேசி IP52-மதிப்பிடப்பட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ளது. 33W சார்ஜிங் சப்போர்ட் உடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 65 மணிநேரம் வரை இயங்கும் என்று கூறப்படுகிறது. 202.5 கிராம் எடையுடையது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்