2017 ஆம் ஆண்டு முதல் CEIR திட்டத்தை சோதனை செய்து வருகிறது மத்திய அரசு தரப்பு.
அனைத்து மொபைல் போன்களுக்கும் ஐ.எம்.ஈ.ஐ என்று சொல்லப்படும் தனித்துவமான எண் இருக்கும். அந்த எண் மூலம்தான் மொபைல் போன் எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியும்.
நாட்டு மக்கள் தங்களது மொபைல் போன், திருடப்பட்டு விட்டாலோ அல்லது தொலைத்துவிட்டாலோ அதை கண்டுபிடித்து தர புதிய திட்டத்தைத் தீட்டியுள்ளது மத்திய தொலைத் தொடர்புத் துறை. மத்திய கம்யூனிகேஷன்ஸ் துறை அமைச்சர், ரவி ஷங்கர் பிரசாத், தொலைந்த மொபைல் போன்களைக் கண்டுபிடிக்கப் புதிய இணையதளம் ஒன்றை துவக்கி வைத்துள்ளார். Central Equipment Identity Register என்ற திட்டம் மூலம் போன்கள் கண்டுபிடித்துத் தரப்படும்.
இந்தத் திட்டம் மூலம் போன் தொலைந்துவிட்டால் அது குறித்து புகார் தெரிவித்து, உடனடியாக ப்ளாக் செய்ய முடியும். மேலும், போன் எங்கிருக்கிறது என்பதையும் ட்ராக் செய்து கண்டுபிடிக்க முடியும்.
அனைத்து மொபைல் போன்களுக்கும் ஐ.எம்.ஈ.ஐ என்று சொல்லப்படும் தனித்துவமான எண் இருக்கும். அந்த எண் மூலம்தான் மொபைல் போன் எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியும். அதே நேரத்தில் தொலைத்தொடர்புத் துறை, “ஐ.எம்.ஈ.ஐ எண்-ஐ நகல் செய்ய முடியும். இதன் காரணமாக ஒரே ஐ.எம்.ஈ.ஐ கொண்ட பல போன்கள் இருக்கின்றன.
இதை வைத்துப் பார்க்கும்போது, ஐ.எம்.ஈ.ஐ எண் கொண்டு ஒரு போனை ப்ளாக் செய்தால், பலர் பாதிக்கப்படுவார்கள். அதைத் தடுக்கும் நோக்கில்தான் CEIR என்கிற திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என்று கூறுகிறது.
இந்த CEIR திட்டம் குறித்து அரசு தரப்பு, “ஒரு மொபைல் போன் தொலைந்துவிட்டால் அதை ப்ளாக் செய்ய இந்த திட்டம் உறுதுணையாக இருக்கும். அதேபோல போலி ஐ.எம்.ஈ.ஐ எண்கள் உருவாவதையும் இந்தத் திட்டம் மூலம் தடுக்க முடியும். திருடிய மொபைல் போன்களை பயன்படுத்துவது இதன் மூலம் தடுக்கப்படும்” என்று திட்டத்தின் நன்மைகள் குறித்தப் பட்டியலை அடுக்கிறது.
எப்படி புகார் தெரிவிப்பது?
உங்கள் மொபைல் போன் தொலைந்துவிட்டால், முதலில் காவல் துறையிடம் சென்று எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து தொலைத்தொடர்புத் துறைக்கு 14422 என்ற எண் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். உங்கள் புகாரைத் தொடர்ந்து சில சோதனைகள் செய்யும் அரசு தரப்பு. அதன் பின்னர் போன் ப்ளாக் செய்யப்படும். யாராவது உங்கள் மொபைல் போனை, புதிய சிம் கார்டு போட்டு பயன்படுத்தினால், அந்த சிம் கார்டின் நிறுவனம் போலீஸிடம் பயனர் குறித்து தகவல் அளிக்கும். தற்போது இந்த சேவை மகாராஷ்டிராவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு முதல் CEIR திட்டத்தை சோதனை செய்து வருகிறது மத்திய அரசு தரப்பு.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Crystal Dynamics' 2013 Tomb Raider Reboot Is Coming to Mobile Devices Next Year