Photo Credit: Google
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Google Pixel 9 Pro செல்போன் பற்றி தான்.
Google Pixel 9 Pro செல்போன் கடந்த ஆகஸ்ட் மாதம் Google Pixel 9 , Pixel 9 Pro XL மற்றும் Pixel 9 Pro Fold ஆகியவற்றுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அப்போது இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை. இப்போது அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அக்டோபர் 17ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பது உறுதியாகிவிட்டது. Google Pixel 9 Pro செல்போன் Titan M2 பாதுகாப்பு சிப்செட்டுடன் டென்சர் G4 SoC மூலம் இயக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 14 மூலம் இயங்கும்.
இந்தியாவில் கூகுள் பிக்சல் 9 ப்ரோ விலை 16GB ரேம் 256GB மெமரி மாடல் 1,09,999 ரூபாய் விலையில் அறிமுகம் ஆகிறது. அக்டோபர் 17 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் நாட்டில் முன்கூட்டிய ஆர்டர்கள் தொடங்கும் என்பதை பிளிப்கார்ட் உறுதிப்படுத்துகிறது . இது Pixel 9 Pro XL மாடல் போலவே ஹேசல், பீங்கான், ரோஸ் குவார்ட்ஸ் மற்றும் அப்சிடியன் வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
கூகுள் பிக்சல் 9 ப்ரோ 6.3-இன்ச் 1.5K (1,280 x 2,856 பிக்சல்கள்) அளவு கொண்ட SuperActua (LTPO) OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 120Hz வரை புதுப்பிப்பு வீதம் மற்றும் 3,000 nits வரை உச்ச பிரகாசத்துடன் இருக்கும். இது Titan M2 பாதுகாப்பு சிப்செட்டுடன் டென்சர் G4 SoC மூலம் இயக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான அவுட்-ஆஃப்-பாக்ஸில் இயங்குகிறது.
கேமரா பொறுத்தவரையில் கூகுள் பிக்சல் 9 ப்ரோ 50 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் கேமரா, 48 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர் மற்றும் 5x ஆப்டிகல் ஜூம் கொண்ட மற்றொரு 48 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா உள்ளிட்ட மூன்று பின்புற கேமரா யூனிட்டை கொண்டுள்ளது. இது செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு முன்பக்கம் 42 மெகாபிக்சல் கேமராவை பெறுகிறது.
கூகுள் பிக்சல் 9 ப்ரோ 45W வயர்டு மற்றும் Qi வயர்லெஸ் சார்ஜிங்சப்போர்ட் கொண்டுள்ளது. 4,700mAh பேட்டரியுடன் வருகிறது. இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68-மதிப்பிடப்பட்ட கட்டமைப்புடன் வருகிறது. இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 6, புளூடூத் 5.3, NFC, Google Cast, GPS, Dual Band GNSS, BeiDou, GLONASS, Galileo, QZSS, NavIC மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்