ஒட்டுமொத்த Foldable செல்போன்களுக்கும் ஆப்பு வச்ச Google

ஒட்டுமொத்த Foldable செல்போன்களுக்கும் ஆப்பு வச்ச Google

Photo Credit: Google

ஹைலைட்ஸ்
  • பிக்சல் 9 சீரிஸ் மூன்று மாடல்களை உள்ளடக்கியது
  • Tensor G4 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது
  • 4,650எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது
விளம்பரம்

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது Google Pixel 9, Pixel 9 Pro, Pixel 9 Pro XL செல்போன்களை பற்றி தான். 

கூகுள் நிறுவனத்தின் Google Pixel 9, Pixel 9 Pro, Pixel 9 Pro XL செல்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 9 சீரிஸில் உள்ள நான்கு மாடல்களையுமே இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது Google Tensor G4 Chipset மூலம் இயக்கப்படுகிறது. இந்தியாவில் கிடைக்கும் ஒட்டுமொத்த  ஸ்மார்ட்போன்களுக்கும் வேட்டு வைக்கும் விலை மற்றும் அம்சங்களுடன் Google Google Pixel 9, Pixel 9 Pro, Pixel 9 Pro XL மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Made by Google 2024 Event மூலம் இந்த செல்போன்கள் அறிமுகம் ஆனது.

இந்தியாவில் Pixel 9, Pixel 9 Pro, Pixel 9 Pro XL விலை

Pixel 9 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல் இந்தியாவில் ரூ.79,999 விலையில் கிடைக்கிறது. இது Peony, Porcelain, Obsidian மற்றும் Wintergreen வண்ணங்களில் வழங்கப்படுகிறது. 128 ஜிபி மாடல் இருக்கிறது. ஆனால் அது இந்தியாவில் அறிமுகம் ஆகவில்லை. 

Pixel 9 Pro விலை 16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மாடல் ரூ. 1,09,999 என்கிற விலையில் விற்பனைக்கு வருகிறது. 

Pixel 9 Pro XL  16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மாடல் ரூ.1,24,999 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இரண்டு ப்ரோ மாடல்களும் ஹேசல், பீங்கான், ரோஸ் குவார்ட்ஸ் மற்றும் அப்சிடியன் வண்ண விருப்பங்களில் வருகின்றன.

ஆகஸ்ட் 22 முதல் பிளிப்கார்ட், குரோமா மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் சில்லறை விற்பனை நிலையங்கள் வழியாக கிடைக்கும். டெல்லி மற்றும் பெங்களூருவில் உள்ள கூகுளுக்குச் சொந்தமான வாக்-இன் மையங்களில் இருந்தும் வாங்கலாம். 

ஆண்ட்ராய்டு 14 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ் OS மூலம்இயங்குகிறது. ஏழு வருட ஆண்ட்ராய்டு OS அப்டேட், பாதுகாப்பு அப்டேட் கிடைக்கிறது. கூகுளின் டென்சர் ஜி4 சிப்செட் மற்றும் 16ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட டைட்டன் எம்2 பாதுகாப்பு கோப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

 48 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா, 10.5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, ஆட்டோஃபோகஸ் கொண்ட  10.8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. 5x ஆப்டிகல் ஜூம், 20x சூப்பர் ரெஸ் ஜூம் வசதி இருக்கிறது. முன்பக்கம் 10 மெகாபிக்சல் கேமரா உள்ளது. மேலும் பல கேமரா மற்றும் எடிட்டிங் அம்சங்களை வழங்குகிறது. இதில் Add Me, Hands-free astrophotography, Face Unblur, Top Shot, Frequent Faces, Video Boost, Wind Noise Reduction, Audio Magic Eraser, Macro Focus Video, மேட் யூ லுக், மற்றும் மேஜிக் எடிட்டர் போன்ற வசதிகள் உள்ளன. 

புரோ மாடல்கள் 30fps வேகத்தில் 8K வீடியோ பதிவை சப்போர்ட் செய்கின்றன. கூகிளின் பிக்சல் 9 ப்ரோ 4,700எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது, அதே சமயம் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் சற்று பெரிய 5,060எம்ஏஎச் செல்களைப் பெறுகிறது. 

இந்தியாவில் Pixel 9 Pro Fold 256ஜிபி மெமரி மாடலாக வருகிறது. அதே நேரத்தில் அமெரிக்கா மற்றும் பிற பிராந்தியங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் 512ஜிபி பெறுவார்கள். 5G, 4G LTE, Wi-Fi 7, ப்ளூடூத் 5.3, NFC, GPS, அல்ட்ரா-வைட்பேண்ட் (UWB) மற்றும் USB 3.2 Type-C போர்ட் இணைப்பு வசதி உள்ளது. முகம் மற்றும் கைரேகை அடிப்படையிலான பயோமெட்ரிக் வசதி உள்ளது.  நீர் எதிர்ப்பிற்கான IPX8 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. 
 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
 
 

விளம்பரம்

விளம்பரம்

© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »