இன்று வெளியாகும் Google Pixel 4, Pixel 4 XL!

Google Pixel 4 series வெளியீட்டு நிகழ்வு இந்திய நேரப்படி இன்றிரவு 7.30 மணிக்குத் தொடங்கும்

இன்று வெளியாகும் Google Pixel 4, Pixel 4 XL!

Photo Credit: Twitter/ Evan Blass

Google Pixel 4 series-ன் வெளியீடு New York-ல் இன்று நடக்கிறது

ஹைலைட்ஸ்
  • Snapdragon 855 SoC-யால் Pixel 4 series இயக்கப்படும்
  • 6.3-inch Quad HD+டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது Pixel 4 XL
  • வெளியீட்டு நிகழ்வு YouTube-ல் நேரடியாக ஒளிபரப்பப்படும்
விளம்பரம்

கூகுள் Pixel 4 சீரிஸ் இன்று நியூயார்க்கில் நடைபெறும் நிறுவனத்தின் மேட் பை கூகுள் நிகழ்வில் தொடங்க உள்ளது. பிக்சல் 4 தொலைபேசிகள் traditional bezels, 90Hz display மற்றும் square-shaped dual rear camera module ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லைவ் ஸ்ட்ரீமிங் லிங்க் மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை: 

கூகுள் நியூயார்க்கில் Pixel 4 வெளியீட்டு நிகழ்வை யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பவுள்ளது. நேரடி ஸ்ட்ரீம் காலை 10 மணிக்கு EST. அதாவது இந்திய நேரப்படி இன்றிரவு 7.30 மணிக்குத் தொடங்கும். மேலும் அதை கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம். 

tipster Evan Blass-ன் கூற்றுப்படி, Google Pixel 4-ன் 64GB ஸ்டோரேஜின் விலை CAD 1,049.95 (சுமார் ரூ. 56,000)-யில் இருந்து தொடங்கும். அதன் 128GB ஸ்டோரேஜின் விலை CAD 1,199.95 (சுமார் ரூ. 64,000) வரை செல்லும். 

Pixel 4 XL-ன் 64GB ஸ்டோரேஜ் CAD 1,199.95 (சுமார் ரூ. 64,000) விலையிலும், அதன் 128GB ஸ்டோரேஜ் CAD 1,359.95 (சுமார் ரூ. 72,500) விலையிலும் கிடைக்கும். 

Pixel 4 சீரிஸ், 'Pink', ‘Sky Blue', ‘Really Yellow', ‘Slightly Green', ‘Clearly White', ‘Just Black', மற்றும் ‘Oh So Orange' ஆகிய நிறங்களில் வரக்கூடும். அமெரிக்க வெளியீட்டு நிகழ்வுக்குப் பிறகு, இந்திய விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் பற்றி விரைவில் அறிவிக்கப்படும். 

சிறப்பம்சங்கள்:

Pixel 4-ல் 5.7-inch full-HD+ OLED Smooth 90Hz டிஸ்பிளேவையும், Pixel 4 XL-ல் 6.3-inch Quad HD+ OLED Smooth 90Hz டிஸ்பிளேவையும் கொண்டிருக்கும். இரண்டு ஸ்மார்ட்போன்களும் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்ட Snapdragon 855 SoC-யால் இயக்கப்படும். 

கேமராவைப் பொருத்தவரை, Pixel 4, Pixel 4 XL உடன்12 மெகாபிக்சல் மற்றும் 16 மெகாபிக்சல் சென்சார்கள் மற்றும் 4K video resolution-ன் ஆதரவைக் கொண்டிருக்கும். தொலைபேசிகள் 10 மெகாபிக்சல் முன் கேமராக்களை 1080p video resolution ஆதரவுடன் பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Face Unlock-யும் ஆதரிக்கும். Google Play Store-ல் பணம் செலுத்துவதற்கு Pixel 4 தொலைபேசிகளில் Face Unlock அம்சம் பயன்படுத்தப்படும் என்றும் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. 

Pixel 4-ல் 2,700mAh பேட்டரியையும், Pixel 4 XL-ல் அதிகமாக 3,700mAh பேட்டரியையும் பேக் செய்யும்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. ஆஃபர் முடியுறதுக்குள்ள செக் பண்ணுங்க! Huge Discount on Samsung Galaxy S25 Plus 5G: Rs 31,700 Off on Amazon India
  2. லீக்கான மிரட்டல் தகவல்கள்Oppo Find X9 Ultra Leak: Dual 200MP Periscope Cameras Confirmed?
  3. 200MP கேமரா.. 7,000mAh பேட்டரி! கிறிஸ்துமஸ் அன்னைக்கு லான்ச் ஆகுது Xiaomi 17 Ultra
  4. ஆப்பிள் மினிக்கு போட்டியாக 'ஒப்போ மினி'! 4 மாடல்களில் மிரட்ட வரும் Reno 15 சீரிஸ்! 7000mAh பேட்டரியா?
  5. ஜனவரி லான்ச் உறுதி! Poco M8 and M8 Pro India Launch: Everything We Know So Far
  6. இனி ஃபோல்டபிள் போன்லயும் தத்ரூபமான போட்டோஸ்! சாம்சங் Z Fold 8-ன் மிரட்டலான கேமரா சிறப்பம்சங்கள் கசிந்தது
  7. ஆப்பிள், குவால்காமுக்கு செம டஃப்! சாம்சங்கின் 2nm எக்ஸினோஸ் 2600 வந்தாச்சு
  8. 8.9mm தடிமன்.. 10 நாள் பேட்டரி! ஒன்பிளஸ் வாட்ச் லைட் (OnePlus Watch Lite) லான்ச் ஆகிடுச்சு
  9. 200MP கேமரா.. ஆனா சைஸ் ரொம்ப சின்னது! OPPO Reno15 Pro Mini - இதோட டிசைனை பார்த்தா அசந்துடுவீங்க
  10. வந்துவிட்டது புது Oppo Pad Air 5: 2.8K Display, 10,050mAh Battery & 5G Support
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »