கூகுள் தனது பிக்சல் போன் தொடருக்கான புதிய மென்பொருள் அப்டேட், ஜனவரி ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பைக் கொண்டுவரத் தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் பிக்சல் போன்களுக்கான வியக்கத்தக்க தாமதமான பாதுகாப்பு இணைப்பு அப்டேட்டைத் தொடர்ந்து, கூகுள் இறுதியாக மாத தொடக்கத்தில் Android பாதுகாப்பு இணைப்புகளை வெளியிடத் திரும்பியுள்ளது. ஜனவரி ஆண்ட்ராய்டு பாதுகாப்பு அப்டேட் Pixel 4, Pixel 3, Pixel 3a, Pixel 2 மற்றும் அந்தந்த XL வேரியண்டுகளுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அப்டேட் Pixel 4 மற்றும் Pixel 4 XL ஆகியவற்றில் குறைந்த பிரகாச அளவில் வண்ண மாற்ற சிக்கலுக்கான (colour shift issue) தீர்வைக் கொண்டுவருகிறது. மேலும், கூகுளின் சமீபத்திய போன்களில் WeChat செயலிக்கான Smooth டிஸ்பிளே ஆதரவை சேர்க்கிறது.
ஆண்ட்ராய்டு 10 இயங்கும் அனைத்து பிக்சல் சாதனங்களும் (first-gen Pixel மற்றும் Pixel XL தவிர) ஜனவரி 2020 OTA அப்டேட்டின் ஒரு பகுதியாக ஜனவரி ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பு கிடைக்கும் என்று, கூகுள் ஆண்ட்ராய்டு பிக்சல் பாதுகாப்பு அப்டேட் ஆதரவு பக்கம் குறிப்பிடுகிறது. மாற்றங்களைப் பற்றி பேசுகையில், புதிய Pixel 3 மற்றும் Pixel 3 XL ஆகியவற்றில் குரல் அழைப்பின் போது ஸ்பீக்கர் ஆடியோ தர மேம்பாடுகளைக் கொண்டுவருகிறது. அதே நேரத்தில் வீடியோ பிடிப்பின் போது ஒலி தரம் Pixel 3a மற்றும் Pixel 3a XL duo-க்கு ஊக்கமளிக்கிறது. கூடுதலாக, ஜனவரி 2020 OTA அப்டேட் WeChat செயலிக்கான மென்மையான டிஸ்பிளே ஆதரவை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது செயலியின் interface இப்போது Pixel 4 மற்றும் Pixel 4 XL's-ன் 90Hz டிஸ்ப்ளேவில் மென்மையாக இருக்கும்.
மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றம் Pixel 4 XL-ல் குறைந்த பிரகாச அளவுகளில் வண்ண மாற்ற சிக்கலுக்கான (colour shifting issue) தீர்வாகும். இது டிஸ்பிளேவின் இயற்கைக்கு மாறான வண்ணத் தொனியை உருவாக்கியது மற்றும் பிரகாசம் 30 சதவிகிதம் அல்லது குறைந்த குறிக்கு கீழே அமைக்கப்பட்டபோது சில சந்தர்ப்பங்களில் பச்சை அல்லது சிவப்பு வண்ண கேஸ்ட் உடன் வித்தியாசமான நிழல்களை உருவாக்கியது. Pixel 4 XL நிறுவனத்திற்கான ஜனவரி 2020 அப்டேட் வண்ண மாற்ற சிக்கலைத் தீர்ப்பதாகக் கூறுகிறது. கூடுதலாக, இது UI-ல் notification டிஸ்பிளே, lashlight toggle function, Wi-Fi crash மற்றும் இணைப்பு சிக்கல்களுடன் தொடர்புடைய பிற சிக்கல்களை சரிசெய்கிறது. முழு OTA ஃப்லைகள் (full OTA files) மற்றும் தொழிற்சாலை படங்களை (factory images) இங்கே பார்க்கலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்