கூகுளின் புதிய தயாரிப்புகளான கூகுள் பிக்சல் 3a மற்றும் பிக்சல் 3a XL மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Photo Credit: Onleaks/ 91Mobiles
பட்ஜெட் போன்களை விரும்பும் மக்களை குறிவைத்து இந்த தயாரிப்பு வெளியாக உள்ளது.
கூகுள் பிக்சல் 3a மற்றும் கூகுள் பிக்சல் 3a XL ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியாகும் என பலரும் எதிர்பார்த்து வருகிற நிலையில், இந்த புதிய போன்கள் 64 ஜிபி சேமிப்பு வசதி மற்றும் ஐரிஸ் போன்ற மூன்று நிறங்களில் வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
மேலும் பட்ஜெட் போன் வாடிக்கையாளகளை கருத்தில் கொண்டு இந்த தயாரிப்பை உருவாக்கியுள்ள கூகுள் நிறுவனம், பல அட்டகாச வசதிகளை சேர்த்துள்ளதாகவும் தெரிகிறது. ஜெர்மனி செய்தி நிறுவனம் ஒன்றால் வெளியிடப்பட்டுள்ள ஒரு தகவலின்படி, கூகுள் நிறுவனம் தங்களது தயாரிப்புகளுக்கு பிக்சல் 3a மற்றும் பிக்சல் 3a XL என பெயர் வைக்க முடிவெடுத்துவிட்டதாக தெரிகிறது.
இந்த போன் கறுப்பு, வெள்ளை மற்றும் ஐரிஸ் என்னும் (ஊதா-நீலம்) நிறங்களில் வெளியாகும் எனத் தகவல். மேலும் வெளியாகியுள்ள தகவல்கள்படி, இந்த பட்ஜட் போன்கள் ரூ.36,000 முதல் விற்பனையைத் துவங்கும் என எதிர்பார்கப்படுகிறது.
4 ஜிபி ரேம், 18W விரைவாக சார்ஜ் செய்யும் வசதி மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வசதியையும் இந்த போன் பெற்றுள்ளது. ஆனால் இதுவரை கூகுள் பிக்சல் 3a மற்றும் கூகுள் பிக்சல் 3a XL ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதி பற்றிய தகவல் ஏதும் கசியவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Battlefield Redsec, Battlefield 6's Free-to-Play Battle Royale Mode, Arrives October 28