பிக் தீபாவளி விற்பனையின் போது எஸ்பிஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியை வழங்குகிறது பிளிப்கார்ட்
Flipkart Big Diwali Sale அக்டோபர் 21 முதல் 25 வரை நடைபெறும்
பிளிப்கார்ட் தனது பிக் தீபாவளி விற்பனையின் முதல் சுற்றை புதன்கிழமை முடித்த பின்னர், அக்டோபர் 21-ல் மீண்டும் நடத்த உள்ளது. இந்த ஐந்து நாள் விற்பனையானது அக்டோபர் 25 ஆம் தேதி நிறைவடையும். 7 Pro, Redmi Note 7S, Realme 5, and Vivo Z1 Pro உள்ளிட்ட பல்வேறு ஸ்மார்ட்போன்களில் ஒப்பந்தங்கள் மற்றும் தள்ளுபடியைக் கொண்டுவரும். பிளிப்கார்ட், பல்வேறு ஸ்மார்ட் டிவி மாடல்கள் மற்றும் வீட்டு உபகரணங்களுக்கும் 75 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கும். இதேபோல், smartwatches, laptops, DSLRs மற்றும் mirrorless கேமராக்களுக்கும் சலுகைகள் கிடைக்கும்.
அக்டோபர் 21 முதல் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு இந்த விற்பனை நடைபெறும். பிளிப்கார்ட் பிளஸ் சந்தாதாரர்களுக்கு அக்டோபர் 20 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இந்திய நேரப்படி இரவு 8 மணி முதல் ஆரம்ப அணுகலை வழங்கும்.
சலுகை விலையில் ஸ்மார்ட்போன்கள்:
புதிய பிளிப்கார்ட் விற்பனையில் Redmi Note 7 Pro-வின் ஆரம்ப விலையாக ரூ. 11,999 ஆகவும், Redmi Note 7S-ன் விலை குறைவாக ரூ. 8,999-க்கு கிடைக்கும். Realme 5 தள்ளுபடியுடன் ரூ. 8,999-க்கு விற்பனைக்கு வரும். மேலும், Vivo Z1 Pro சமீபத்திய விற்பனையின் போது, ஆரம்ப விலையாக ரூ. 12.990-க்கு கிடைத்தது.
| Smartphone Model | Sale Starting Price (Rs.) | Regular Starting Price (Rs.) |
|---|---|---|
| Redmi Note 7 Pro | 11,999 | 13,999 |
| Redmi Note 7S | 8,999 | 10,999 |
| Realme 5 | 8,999 | 9,999 |
| Vivo Z1 Pro | 12,990 | 14,990 |
தள்ளுபடி விலைகளுடன், பிளிப்கார்ட் வழங்கும் பிக் தீபாவளி விற்பனையின் போது பல்வேறு ஸ்மார்ட்போன்கள் no-cost EMI ஆப்ஷன்ஸ் மற்றும் எக்ஸ்சேஞ் சலுகைகளுடன் கிடைக்கும். பிளிப்கார்ட் விற்பனையில் பட்டியலிடப்பட்ட தொலைபேசிகளுடன், முழுமையான மொபைல் பாதுகாப்பு சேவையைச் சேர்ப்பதற்கும் சில தள்ளுபடிகள் கிடைக்கும்.
சலுகை விலையில் smart TVs, DSLRs, smartwatches மற்றும் பல....
புதிய விற்பனை 50,000-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்கு 75 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும். Samsung Smart LED TV 32-inch-க்கு சில தள்ளுபடியை microsite பரிந்துரைக்கிறது. இதேபோல், பல்வேறு வீட்டு உபகரணங்களில் சலுகைகள் இருக்கும்.
பிளிப்கார்ட் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் பாகங்கள் மீது 90 சதவீதம் தள்ளுபடி கோரியுள்ளது. DSLRs, mirrorless கேமராக்கள், மற்றும் லேப்டாப்களுக்கு ஒப்பந்தங்கள் இருக்கும். கூடுதலாக, பிளிப்கார்ட் பிராண்டுகளின் தயாரிப்புகளுக்கு 85 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.
விற்பனை நாட்களில் நள்ளிரவு 12 மணி, காலை 8 மணி மற்றும் மாலை 4 மணிக்கு மொபைல் போன்கள், டி.வி மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களில் "Dhamaka Deals" மூலம் கூடுதல் தள்ளுபடிகள் இருக்கும். அதேபோல், பிளிப்கார்ட்டின் பாரம்பரிய விளம்பரங்களான "Rush Hour" மற்றும் "Maha Price Drop" ஆகியவை அடுத்த விற்பனைச் சுற்றில் கிடைக்கும்.
பிக் தீபாவளி விற்பனையின் போது எஸ்பிஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியை வழங்க ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் பிளிப்கார்ட் கூட்டு சேர்ந்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
The Offering Is Streaming Now: Know Where to Watch the Supernatural Horror Online
Lazarus Is Now Streaming on Prime Video: Know All About Harlan Coben's Horror Thriller Series