'ஐ லவ் எம்ஐ டேஸ்': மீண்டும் தள்ளுபடி விற்பனையை அறிமுகப்படுத்திய எம்ஐ நிறுவனம்!

'ஐ லவ் எம்ஐ டேஸ்': மீண்டும் தள்ளுபடி விற்பனையை அறிமுகப்படுத்திய எம்ஐ நிறுவனம்!

'ஐ லவ் எம்ஐ டேஸ்' சேல் தற்போது ஃபிளிப்கார்ட், அமேசான் மற்றும் எம்ஐ.காமில் லைவாகியுள்ளது

ஹைலைட்ஸ்
  • வட்டியில்ல தவனைதிட்டத்தை அறிமுகம் படுத்திய 'ஐ லவ் எம்ஐ டேஸ்' சேல்.
  • ரெட்மீயின் நோட் 5 ப்ரோ மற்றும் 6 தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது.
  • எம்ஐ பேண்ட் ஹெச்.ஆர்.எக்ஸ் மற்றும் எம்.ஐ டிவி 4ஏ ப்ரோ இந்த சேலில் விற்பனை
விளம்பரம்

சியோமி சார்பாக வெளியிடப்படும் தள்ளுபடி சேல்களின் தொடர்சியாக ‘ஐ லவ் எம்ஐ டேஸ்' என்னும் தள்ளுபடி சேல் தற்போது தொடங்கியுள்ளது. ஃபிளிப்கார்ட், அமேசான் மற்றும் எம்ஐ.காம் போன்ற இணையதளங்களில் இந்த விற்பனை தொடங்கப்பட்டுள்ளன.

அதன்படி இந்த சேலில் ரெட்மீ 6, ரெட்மீ நோட் 6 ப்ரோ மற்றும் ரெட்மீ நோட் 5 ப்ரோ போன்ற தயாரிப்புக்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படவுள்ளன. மேலும் இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி எம்ஐ நிறுவனத்தின் தயாரிப்புக்களான எம்ஐ பேண்ட் ஹெச்.ஆர்.எக்ஸ், எம்.ஐ டிவி 4ஏ ப்ரோ போன்ற தயாரிப்புகளும் விற்பனை செய்யப்படவுள்ளன.

ரூபாய் 13,599க்கு விற்பனை செய்யப்படும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதியை கொண்டுள் ரெட்மீ நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன், இந்த சேலின் போது ரூபாய் 12,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே வகையைச் சேர்ந்த 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதியை கொண்டுள்ள போன் 14,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த முக்கிய தள்ளுபடிகளுடன் வட்டியில்லா தவனைத் திட்டம் மற்றும் வங்கிகள் வழங்கும் இதற சலுகைகளையும் பெற முடியும். 

ரூபாய் 12,999 விற்பனை செய்யப்பட்டு வரும் ரெட்மீ நோட் 5 ப்ரோ, இந்த சேலில் ரூபாய் 11,898 க்கு விற்பனை செய்யப்படுகறிது. அத்துடன் 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதியை கொண்டுள்ள ரெட்மீ 6 ஸ்மார்ட்போன் ரூபாய் 8,499 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் இந்த ‘ஐ லவ் எம்.ஐ. டேஸ்' சேல் மூலம் விற்பனை செய்யப்படும் எம்ஐ பேண்ட் ஹெச்.ஆர்.எக்ஸ் தள்ளுபடி மூலம் ரூபாய் 1,299 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல் எம்.ஐ டிவி 4ஏ ப்ரோவின் இரண்டு (43 மற்றும் 49 இஞ்ச்) வகை தொலைக்காட்சிகளுக்கும் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்கால விலை குறைப்பில், ரூ.22,999 (43 இஞ்ச்) மற்றும் ரூ.30,999 க்கு (49 இஞ்ச்) ஆகிய விலைகளில் தொலைக்காட்சிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த சேல் வரும் பிப்ரவரி 13 ஆம் தேதியுடன் நிறைவடையும்.
 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi, Flipkart Amazon sale
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »