தந்தையர் தினம் ஸ்பெஷல்: 'டாடி கூல்' பரிசுகளின் தொகுப்பு

தந்தையர் தினம் ஸ்பெஷல்: 'டாடி கூல்' பரிசுகளின் தொகுப்பு
ஹைலைட்ஸ்
  • ஜூன் 17 ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்பட உள்ளது
  • பயன்படகூடிய, சிறந்த டெக் பொருட்களை பரிந்துரைத்துள்ளோம்
  • முன்னரே ஆர்டர் செய்வதினால், விரைவில் பொருட்கள் வந்து சேரும்
விளம்பரம்

இன்னும் சில தினங்களில் தந்தையர் தினம் வர இருக்கையில், பரிசு வாங்க இதுவே சரியான நேரம். உங்கள் டாடிக்கு பிடித்த, பயன்பட கூடிய பொருட்களை வாங்கி பரிசளியுங்கள். அவரது அலுவலக கேபின்லையோ, வீட்டிலோ பயன்படுத்தும் வகையில் வாங்கி தரலாம். இந்தாண்டில், உபயோகமாக பயன்படகூடிய, பொருட்களை பரிசளியுங்கள். இப்போதே, பட்டியலை பார்த்து விருப்பமான பரிசுகளை ஆர்டர் செய்யுங்கள்


ரோல்ர் மினி
உங்களின் தந்தை கார் ஓட்டுபவராக இருந்தால், ரோல்ர் மினி போன்ற பயன்பாட்டு பொருட்கள் உபயோகமாக இருக்கும். பெரும்பாலன நேரங்களில், கார் நிறுத்துமிடத்தை மறந்து தேடிக்கொண்டிருப்போம். இப்படி கார் சார்ந்த பிரச்சனைகளின் தீர்வாக ரோல்ர் மினி உள்ளது. ஒரு முறை இன்ஸ்டால் செய்துவிட்டால் போது, பல வசதிகளை கொண்டுள்ளது. கார் நிற்கும் இடம், எரிபொருள் அளவு, பேட்டரி அளவு, என பல வசதிகள் உள்ளன. இந்த பயன்பாடு பெரும்பாலும் அனைத்து கார்களிலும் பொருந்தகூடிய வகையில் உள்ளன.
விலை : 6,012 ரூபாய் ; கிடைக்கும் இடம் : ஆமேசான்


அமேசான் எகோ
பொழுது போக்கு சார்ந்த பல பரிசுகள் இருந்தாலும், இசையோடு நனையும் நிலை பொதுவாக அனைவருக்கும் பிடித்ததாக அமையும். அப்படி, இசையோடு சேர்ந்து இருக்க அமேசான் ஸ்பீக்கர் பரிசளியுங்கள். சிறந்த பொழுது போக்கு கருவியாக அமையும். அமேசானில் இப்போது தள்ளுபடி விற்பனையில் கிடைக்கிறது. இரண்டு ஸ்பீக்கர்கள் வாங்கினால், 100ஒ ரூபாய் தள்ளுபடி உள்ளது.
விலை: 8,999 ரூபாய் ; கிடைக்கும் இடம் : அமேசான்

கூகுள் ஹோம்
உங்களிடம் கூகுள் ஈகோ சிஸ்டம் இருந்தால், கூகுள் ஹோம் வாங்கி பரிசளிக்கலாம். அமேசான் எகோவிற்கும் கூகுள் ஹோமிற்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. இசை கேட்பது, ஸ்மார்ட் ஹோம் கருவிகள் கையாள்வது என கூகுளின் சேவைகளை கொண்டிருக்கும்.
விலை : 8,999 ரூபாய் ; கிடைக்கும் இடம் : பிளிப்கார்ட்

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 செல்லுலார்
இந்தியாவில் ஆபிள் வாட்ச் சீரீஸ் 3 செல்லுலார் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் விற்பனை செய்கின்றன. செல்லுலார் கனெக்டிவிட்டியுடன் கூடிய அனைத்து வசதிகளும் இந்த கைகடிகாரத்தில் உள்ளன.அழைப்புகள் ஏற்பது, எஸ்எம்எஸ் செய்வது,
பாடல் தேர்ந்தெடுப்பது ஆகியவை செய்யலாம். இதனால், எந்நேரமும் ஐபோனை கையில் வைத்திருக்க வேண்டியதில்லை.
விலை : 39,080 முதல் ஆரம்பம் ; கிடைக்கும் இடம் : ஜியோ அல்லது ஏர்டெல்

சோனி H900 வையர்லெஸ் ஹெட்போன்
20,000 ரூபாய்க்கு கீழ் பரிசு வாங்க வேண்டும் என எண்ணினால், சோனி வையர்லெஸ் ஹெட்போன் சரியானதாக அமையும். சிறந்த ஆடியோ தொழில்நுட்பம் கொண்டு வருவதால், டிஜிட்டல் நாய்ஸ் கான்சல் வசதிகளும் இடம்பெற்றுள்ளன. ப்ளூ டூத் கனெக்ட் மூலம், வையர்லெஸ் ஹெட்போனை கனெக்ட் செய்து
கொள்ளலாம்
விலை : 17,985 ரூபாய் ; கிடைக்கும் இடம் : அமேசான்

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: fathers day, gifts 2018
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »