இந்தியாவில் வெளியான ஏசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 மற்றும் ஏசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் எம்2 போன்களுக்கு ஆண்ட்ராய்டு 9 பைய் அப்டேட் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதமே இந்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்கப்பட்ட நிலையில், இந்த அப்டேட் ஏசுஸ் வாடிகையாளர்களை தற்போது வந்தடைந்துள்ளது. ஏசுஸ் நிறுவனம் சார்பில் இந்த அப்டேட் வெளியிடப்பட்டுள்ளதால், இந்த அப்டேட்டை பெறதாவர்கள் அதை நேரடியாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
மேலும் இந்த புதிய அப்டேட்டை பற்றிய முழு தகவல்கள் ஏசுஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. ரூ.11,199-க்கு விற்பனை செய்யபட்ட ஏசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 வாடிக்கையாளர்களுக்கு v16.2017.1903.050 ஃபர்ம்வேர் வகையும், ரூ.8,499க்கு விற்பனை செய்யப்பட்ட ஏசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் எம்2 போனுக்கு v16.2018.1903.37. ஃபர்ம்வேர் அப்டேட்டும் கிடைத்துள்ளது.
இந்த அப்டேட்டை பீட்டா தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள 392 எம்பி அளவு மெமரி தேவைப்படும். மேலும் ஏசுஸ் நிறுவனம் சார்பில் இந்த அப்டேட் மூலம் ஏப்ரல் 2019 பாதுகாப்பு பேட்ச் மற்றும் ஆண்ட்ராய்டு 9 பைய் மென்பொருளின் முழு அமைப்புகளையும் கொண்டு வெளியாகியுள்ளது.
இன்று சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 தயாரிப்பை பற்றியே தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 போனிற்கான ஆண்ட்ராய்டு அப்டேட் ஏப்ரல் 15 தேதிக்குள் வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்