Asus ZenFone Max M2, ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டைப் பெறத் தொடங்கியது. இந்த போன் 2018-ல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் சிறப்பு ஸ்னாப்டிராகன் 632 சிப்செட் மற்றும் 4,000 எம்ஏஎச் பேட்டரி ஆகும். இந்த போன் வெளியான இரண்டு ஆண்டுக்கு பிறகு புதிய மென்பொருள் அப்டேட் வருகிறது. இந்த அப்டேட் அனைத்து பயனர்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டின் பதிப்பு எண் 17.2018.2002.29 உடன் வருகிறது. Asus ZenFone Max M2-க்கான அண்ட்ராய்டு 10 அப்டேட்டை மன்றம் மூலம் நிறுவனம் அறிவித்துள்ளது. சாதனம் சமீபத்திய ஆண்ட்ராய்டு மென்பொருளாக மேம்படுத்தப்பட்டுள்ளது என்பதை சேஞ்ச்லாக் உறுதிப்படுத்துகிறது. எனவே பயனர்கள், டார்க் மோட், சமீபத்திய ஆண்ட்ராய்டு சைகை வழிசெலுத்தல், புதிய யுஐ மற்றும் பல அம்சங்களை எதிர்பார்க்கலாம்.
இந்த அப்டேட், வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கான முன்னோட்ட இடைமுகத்தையும் கொண்டுவருவதாகவும், வீடியோவுக்கான CIF மற்றும் QVGA கோப்புகளுக்கான ஆதரவை சேர்க்கிறது என்றும் சேஞ்ச்லாக் தெரிவிக்கிறது. மென்பொருள் அப்டேட்டை வலைத்தளத்தில் பார்க்க பரிந்துரைக்கிறோம்.
இந்த அப்டேட் ஓவர்-தி-ஏர் (OTA) முறையில் வெளியிடப்படுகிறது, எனவே பயனர்கள் இந்த அப்டேட்டை அவர்களே பெறுவார்கள். நீங்கள் அறிவிப்பைப் பெறவில்லை எனில், போனின் Settings-ல் அப்டேட்டை காணலாம் மற்றும் பதிவிறக்கம் செய்யலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்