இன்று வெளியாகிறது அசுஸ் ஜென்போன் 6: அதன் விலை, சிறப்பம்சங்கள் என்னவாக இருக்கும்?

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 16 மே 2019 15:12 IST
ஹைலைட்ஸ்
  • ஆசுஸ் ஜென்போன் 6-ன் அறிமுக நிகழ்ச்சி ஸ்பெயின் நாட்டிலுள்ள வேலன்சியா நகரில
  • யூடூப் பக்கத்தில் நேரலையாக வெளியிட திட்டமிட்டுள்ளது ஆசுஸ் நிறுவனம்.
  • நாட்ச் அல்லது பன்ச்-ஹோல் டிஸ்ப்லே கொண்டு வெளியாகலாம்

ஸ்னாப்டிராகன் 855 ப்ராசஸர் கொண்டு வெளியாகவுள்ள ஜென்போன் 6


அசுஸ் நிறுவனம், ஆண்டுக்கு ஒரு ஜென்போன் தொடரில் ஒரு போனை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் அந்த நிறுவனத்திலிருந்து வெளிவர இருக்கும் மொபைல்போன் தான் இந்த அசுஸ் ஜென்போன் 6. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 855 ப்ராசஸர், மூன்று சிம் ஸ்லாட்கள், ஸ்மார்ட் கீ போன்ற வசதிகள் இடம்பெற்றிருக்கும் என ஒரு டீசரின் வாயிலாக  வெளியிட்டிருந்தது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 48 மெகா பிக்சல் கேமரா, 5000mAh பேட்டரி இடம்பெறலாம், போன்ற தகவல்களை சில குறிப்புகள் வாயிலாக வெளியிட்டிருக்கிறார் அந்த நிறுவனத்தை சேர்ந்த ஒரு அதிகாரி.

இந்த ஸ்மார்ட்போன் மே 16-ஆம் தேதியான இன்று ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இரண்டு சிம் வசதி கொண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில், ஸ்மீபத்தில் வெளியான ஒன்ப்ளஸ் போன்கள் போன்றில்லாமல், 3.5mm ஹெட்போன் ஜேக் அமைந்திருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசுஸ் ஜென்போன் 6-ன் அறிமுக நிகழ்வு: நிகழ்ச்சி நேரம் மற்றும் நேரலை குறித்த தகவல்கள்!

ஆசுஸ் ஜென்போன் 6-ன் அறிமுக நிகழ்ச்சி ஸ்பெயின் நாட்டிலுள்ள வேலன்சியா நகரில் நடக்கவுள்ளது. இந்த நிகழ்ச்சி அந்த நாட்டின் நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கவுள்ளது. இது இந்திய நேரப்படி இரவு 11:30 மணியாகும். ஸ்பெயினில் நடக்கவுள்ள இந்த அறிமுக நிகழ்வினை தனது யூடூப் பக்கத்தில் நேரலையாக வெளியிட திட்டமிட்டுள்ளது ஆசுஸ் நிறுவனம். அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியினை நேரலையில் ஓளிபரப்ப பிரத்யேகமாக ஒரு தளத்தையும் மேம்படுத்தியுள்ளது ஆசுஸ் நிறுவனம். இதன் மூலம், நாம் இன்று இரவு 11:30 மணிக்கு ஆசுஸ் ஜென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்வை நேரலையில் காணலாம்.

ஆசுஸ் ஜென்போன் 6: எதிர்பார்க்கப்படும் விலை!

ஆசுஸ் நிறுவனம், தன் அடுத்த ஸ்மார்ட்போனான ஆசுஸ் ஜென்போன் 6-ன் விலையை இன்று நடக்கவுள்ள அதன் அறிமுக நிகழவில் வெளியிடவுள்ளது. ஆனால், முன்னதாக வெளியான தகவல்களின்படி, இந்த ஸ்மார்ட்போனின் விலை இதுவாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த தகவல்களின்படி, இந்த ஸ்மார்ட்போன் 6GB RAM + 128GB சேமிப்பு அளவு, 8GB RAM + 256GB சேமிப்பு அளவு மற்றும் 12GB RAM + 512GB சேமிப்பு அளவு என மூன்று வகைகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட ஆசுஸ் ஜென்போன் 6 19,990 தாய்வான் டலர்கள்(45,100 ரூபாய்),  8GB RAM + 256GB சேமிப்பு அளவு கொண்ட ஆசுஸ் ஜென்போன் 6 23,990 தாய்வான் டலர்கள்(54,100 ரூபாய்) மற்றும் 12GB RAM + 512GB சேமிப்பு அளவு கொண்ட ஆசுஸ் ஜென்போன் 6 29,990 தாய்வான் டலர்கள்(67,700 ரூபாய்) என்ற விலைகளில் கிடைக்கப்பெறலாம் என கூறப்படுகிறது. 

Advertisement

இந்த ஸ்மார்ட்போன்களின் இந்திய சந்தை விலை குறித்த எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

ஆசுஸ் ஜென்போன் 6: எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்!

சில டீசர்கள் வாயிலாக இந்த ஆசுஸ் ஜென்போன் 6-ன் சிறப்பம்சங்களை வெளியிட்டிருந்தது ஆசுஸ் நிறுவனம். அதன்படி, குவால்காம் நிறுவனத்தின் ஸ்னேப்ட்ராகன் 855 ஒரிங்கிணைக்கப்பட்ட அமைப்பு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டு பின்புற கேமராக்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 48 மெகாபிக்சல் மற்றும் 13 மெகாபிக்சல் என இரண்டு அளவிலான கேமராக்கள் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைல்போனில் மூன்று ஸ்லாட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது ஆசுஸ் நிறுவனம், அதில் இரண்டு சிம்களுக்காகவும் ஒன்று மெமரி கார்டுக்காகவும் இருக்கலாம். மேலும், இதில் ஒரு ஸ்மார்ட் கீ பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. 

Advertisement

மேலும், இந்த ஸ்மார்ட்போன் FHD+ திரை (1080x2340 பிக்சல்கள்) மற்றும் 19.5:9 என்ற திரைவிகிதத்திலான திரையை கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும், இந்த ஸ்மார்ட்போனில் ஃபிங்கர் பிரின்ட் பின்புறமும், மற்றும், முன்புற கேமரா, நாட்ச் அல்லது பன்ச்-ஹோல் டிஸ்ப்லே கொண்டு வெளியாகலாம், எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Galaxy S26: Camera Upgrades மற்றும் Snapdragon 8 Elite Gen 5 உடன் முழு விவரங்கள் லீக்
  2. வெறும் ₹1,299-க்கா ANC நெக்பேண்டா? Lava-வோட இந்த புதிய ஆடியோ ப்ராடக்ட் எப்படி இருக்குன்னு பாருங்க!
  3. மொபைல் கெய்மிங்க்கு இதான் Next Level! OnePlus 15 பத்தி தெரிஞ்சுக்கணுமா? மிஸ் பண்ணாதீங்க
  4. இந்திய கம்பெனில இருந்து மிரட்டலான போன்! Lava Agni 4 டீஸர் பத்தி முழு விவரம்!
  5. ரியல்மி-யின் புதிய ராக்கெட்! Realme GT 8 Pro நவம்பர்-ல் Flipkart-ல் தரையிறங்குகிறது!
  6. 7,500mAh சார்ஜரே இல்லாத பேட்டரியா? புதிய iQOO Neo 11 மாடல் சும்மா தெறிக்குது!
  7. 200MP Zeiss கேமராவுடன் Vivo X300 Pro அறிமுகம்! கேமரா பிரியர்களுக்கு ஒரு பொக்கிஷம்
  8. iQOO-வின் அடுத்த ராக்கெட்! iQOO 15, 10,000+ Multi-Core ஸ்கோருடன் Geekbench-ல் மிரட்டல்
  9. ஒன்ப்ளஸ், iQOO-வுக்கு போட்டியாக Realme! GT 8 Pro நவம்பர் 20-ல் இந்தியாவில் அறிமுகம்?
  10. Snapdragon 8 Elite Gen 5 சில்லுடனான முதல் போன்! OnePlus 15 Flagship-ன் ஸ்பெஷல் அம்சங்கள் இதோ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.