ஏசஸ் சென்போன் 5 தொகுப்பில், பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஏசஸ் சென்போன் 5Z இந்தியாவில் இன்று வெளியாகியுள்ளது.
கடந்த செவ்வாய் கிழமை அன்று, ஏசஸ் சென்போன் 5Z-யின் டீசர் வெளியிடப்பட்டது. மேலும், எக்ஸ்ளூசிவாக இது ஃப்ளிக்கார்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது.
சிறந்த பட்ஜெட் போன்களில் ஒன்றான ஏசஸ் சீரீஸின் சென்போன் மாக்ஸ் ப்ரோ M1 இரண்டு மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு வந்தது. அதனை தொடர்ந்து ஏசஸின் அடுத்த படைப்பு இன்று விற்பனைக்கு வந்திருக்கிறது. கடந்த ஆண்டு நடைப்பெற்ற MWC 2018 நிகழ்ச்சியில் ஏசஸ் சென்போன் 5Z அறிமுகப் படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசஸ் சென்போன் 5Z விலை
ஃப்ளிப்கார்ட் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் வெளியாகியிருக்கும் இந்த ஏசஸ் சென்போன் 5Z, 6ஜிபி RAM / 64 ஜிபி ஸ்டோரேஜ் உள்ள கைபேசி 29,999 ரூபாயாகவும், 8ஜிபி RAM / 124 ஜிபி ஸ்டோரேஜை உள்ளடக்கிய ஃபோன் 32,999 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. தவிர, 8ஜிபி RAM / 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மற்றொரு ரகம் 36,999 ரூபாய்க்கு விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வெளியிட்டு தள்ளுபடி விற்பனை குறித்த தகவல்களை ஏசஸ் நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என தெரிகிறது.
ஏசஸ் சென்போன் 5Z சிறப்பம்சங்கள்
நானோ டூயல் சிம், சென்UI 5.0, ஆண்டுராய்டு 8.0 ஓரியோ தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப் பட்டுள்ளது. 6.2 இன்ச் முழு ஹெச்.டி. டிஸ்ப்ளே, (1080x2246 பிக்ஸல்ஸ்) எல்.சி.டி டிஸ்ப்ளே, 19:9 ரேடியோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏசஸ் சென்போன் 5Z குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 SoC உடன் 8ஜிபி RAM / 256 ஜிபி ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது.
ஏசஸ் சென்போன் 5Z-வின் கேமராவைப் பொறுத்த வரையில் டூயல் கேமராவுடன், 12 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார், f/1.8 அபெர்ச்சருடன், 8 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் f/2.2 அபெர்ச்சரைக் கொண்டுள்ளது. மேலும், 8 மெகாபிக்ஸல் கொண்ட முன்பக்க கேமராவும் f/2.0 அபெர்ச்சருடன் வருகிறது. கூடுதலாக. ஃபேஸ் லாக் வசதியும் இதில் உள்ளது.
ஏசஸ் சென்போன் 5Z விற்பனை, இன்று முதல் ஃப்ளிப்கார்ட்டில் தொடங்கியுது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்