ஆப்பிள் நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் கருவிகளை தயாரிக்க அலுமினிய உருக்கு தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் தனது தயாரிப்புகளை அலுமினியத்தினால் உற்பத்தி செய்து வருகிறது. இந்நிலையில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் கருவிகளைத் தயாரிக்க ஆப்பிள் முன்வந்துள்ளது. ஆல்கோ கார்ப்பரேஷன் மற்றும் ரியோ டின்டோ அலுமினியம் ஆகியவை இணைந்து பசுமை இல்ல வாயுக்கள் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் ஆப்பிள் நிறுவன கருவிகளை தயாரிக்கிறது.
இதற்காக 144 மில்லியன் டாலர் அளவுக்கு அலுமினிய நிறுவனம் மற்றும் கனடா அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. எலைசிஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் அலுமினியத்தை உருக்கும்போது கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியாவது குறைக்கப்படும். இதன்மூலம் ஆரோக்கியமான வருங்காலத்தை உருவாக்க முடியும் என ஆப்பிள் நிறுவன தலைமை செயல்திட்ட அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்