ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐ-போனிலிருந்த டிசைன்களை அப்படியே நகல் செய்ததாகக் கூறி சாம்ஸங் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது.
ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐ-போனிலிருந்த டிசைன்களை அப்படியே நகல் செய்ததாகக் கூறி சாம்ஸங் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக நடந்த வந்த நிலையில் தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் மிக முக்கிய தயாரிப்பான ஐ-போனின் டிசைன்களை சாம்ஸங் காப்பியடித்ததாக கூறி, ஆப்பிள் நிறுவனம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தது. அமெரிக்காவில் தொடுக்கப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சென்ற மாதம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், ‘சாம்ஸங் நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்தின் டிசைனை நகல் செய்ததற்காக 3,700 கோடி ரூபாய் இழப்பீடாக கொடுக்க வேண்டும். இழப்பீடு கொடுத்தலுக்குப் பிறகு, இது தொடர்பாக இரு நிறுவனங்களும் தொடுத்துள்ள மற்ற வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்’ என்று உத்தரவிட்டது.
இதையடுத்து, சாம்ஸங் நிறுவனம், ஆப்பிளுக்கு இழப்பீடு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், எவ்வளவும் பணம் கைமாறியது என்பது குறித்து அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
இது குறித்து ஆப்பிள் நிறுவனம், ‘இந்த வழக்கு என்பது பணத்தை குறிவைத்து நடத்தப்பட்டதில்லை. இதை நாங்கள் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறோம். ஆப்பிள் நிறுவனத்தில் கடும் உழைப்பைச் செலுத்தி டிசைன்களை உருவாக்கும் ஊழியர்களின் உழைப்பை நாங்கள் காக்க வேண்டும் என்று நினைத்தோம்’ என்று மட்டுமே கூறியது. எவ்வளவு இழப்பீடு கொடுக்கப்பட்டது என்பது குறித்து தெரிவிக்கவில்லை.
சாம்ஸங் நிறுவனம், இந்த விவகாரம் குறித்து கருத்து கூற மறுத்துவிட்டது. மொபைல் தயாரிப்பில் உலக அளவில் முண்ணனியில் இருக்கும் இரண்டு நிறுவனங்களுக்கு மத்தியில் நடந்த இந்த வழக்கு சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்துக்கு, சாம்ஸங் இழப்பீடு கொடுத்தது அந்நிறுவனத்துக்கு வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Redmi Note 15 Series India Launch Timeline Tipped; Redmi 15C Could Debut This Month