வாட் வரி மாற்றத்தால் சீனாவில் ஆப்பிள் ஃபோன்களின் விலை குறைப்பு!

விளம்பரம்
Written by Reuters மேம்படுத்தப்பட்டது: 2 ஏப்ரல் 2019 22:04 IST

சீனாவில் ஆப்பிள் உள்ளிட்ட பிராண்டட் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி பொருட்களின் விலையை சற்று குறைத்திருக்கின்றன. சீனாவில் வாட் வரி குறைப்பு நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து ஆப்பிள் உள்ளிட்ட போன்களின் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. 

இதுதொடர்பான விவரங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த விலைக்குறைப்பு நேற்றில் இருந்து நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதன்படி 500 யென் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 5 ஆயிரம் ரூபாய் அளவுக்கு விலை குறைந்துள்ளது. 

இதேபோன்று சீனாவில் நன்றாக விற்பனையாகி வரும் லூயிஸ் விட்டோன், கெரிங் கக்கி உள்ளிட்ட பிராண்டடுகளின் உற்பத்தி பொருட்களின் விலையும் 3 சதவீதம் வரை குறைவாகி உள்ளது. 

சீனாவில் வாட் வரி விதிப்பில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதையடுத்து பி.எம். டபிள்யூ, மெர்சிடிஸி பென்ஸ் உள்ளிட்ட கார்களின் விலை கடந்த மாதம் குறைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மொபைல் தயாரிப்பு நிறுவனங்களும் விலை மாற்றத்தை செய்துள்ளன.

ஆப்பிள் போனின் விலை குறிப்பு குறித்து அதன் தரப்பில் விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை. பொருளாதாரத்தை பொருத்தளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனா கொடிகட்டி பறந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Apple, iPhone, China
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல் நாள் 1 சிறப்பம்சங்கள்: மொபைல், டேப்லெட், ஹெட்போன் சிறந்த சலுகைகள்!
  2. இந்தியாவில் ரூ. 10,000-க்குள் சோனி, JBL மற்றும் சவுண்ட்கோர் பிராண்டுகளின் சிறந்த நாய்ஸ்-கேன்சலிங் ஹெட்போன்கள்
  3. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: விவோ மற்றும் ஐகூ ஸ்மார்ட்போன்களில் சிறந்த சலுகைகள்
  4. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: ரூ. 50,000-க்கும் குறைவான விலையில் ஸ்மார்ட் டிவிகளுக்கான சிறந்த சலுகைகள்
  5. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: ரூ. 50,000-க்குக் குறைவான ஸ்மார்ட்போன்களில் சிறந்த சலுகைகள்
  6. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: ANC உடன் கூடிய இயர்பட்ஸ்களில் சிறந்த சலுகைகள்
  7. கூகுள் பிக்சல் 11 சீரிஸ்: வெளியீட்டுத் தேதி, எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள், விவரக்குறிப்புகள் மற்றும் பல
  8. iQOO Neo 11 Ultra அறிமுக தேதி அறிவிக்கப்பட்டது; முக்கிய சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாயின
  9. Redmi K100 அறிமுகத்திற்கு முன் K110-க்கு பதிலாக K200 சீரிஸ் வரக்கூடும்: Redmi அதிகாரி தகவல்
  10. ஜேபிஎல் லைவ் 780என்சி விமர்சனம்: ஒரு முழுமையான தொகுப்பா?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.