ஐ ஃபோன், ஐபேட் மாடல்களுக்கு இரண்டாவது iOS 12 பீட்டாவை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன் வெளியிடப்பட்ட முதல் iOS 12 பப்ளிக் பீட்டாவில் ஏற்பட்ட ஜிபிஎஸ், கார் ப்ளே பிரச்னைகள் காரணமாக இந்த இரண்டாவது பீட்டா வெளிவந்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட வாய்ஸ் மெமோ ஆப் வசதி, குறைந்த பேட்டரி பவர் மோட் இண்டிகேட்டர், நோட்டிபிகேஷனில் உள்ள சில மாற்றங்கள் உட்பட பல வசதிகள் இதில் உள்ளன.
iOS 12 பப்ளிக் பீட்டவை பதிவிறக்கம் செய்ய
அனைத்து iOS 11 ஐ ஃபோன், ஐபேட் ஐபோட் டச் மாடல் ஆகியவற்றில் இந்த வசதியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தவிர ஐ ஃபோன் 5S மற்றும் அதற்கு பிறகு வெளிவந்த ஐ ஃபோன்களில் இந்த வசதியை பெற்று கொள்ளலாம். மேலும், அனைத்து ஐபேட் ஏர், ஐபேட் ப்ரோ மாடல்களிலும், ஐபேட் ஐந்தாவது ஜெனரேஷன் மற்றும் அதற்கு பின் வந்த மாடல்களிலும், ஐபேட் மினி 2 மற்றும் பின் வந்த மாடல்களிலும், ஐபாட் டச் ஆறாவது ஜெனரேஷனிலும் இதனை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
முதல் முறையாக iOS 12 பப்ளிக் பீட்டா பதிவிறக்கம் செய்வதாக இருந்தால், ஆப்பிள் பீட்டா சாஃப்ட்வேர் ப்ரோகிராமில் பதிவிட வேண்டும். ஆப்பிள் பீட்டா சாஃப்ட்வேர் ப்ரோகிராம் குறித்த சந்தேகங்களுக்கு, ஆப்பிள் நிறுவனம் பதில் அளித்துள்ளது. மேலும், ஃபோனில் உள்ள டேட்டாவை பேக்-அப் எடுத்த பின், iOS 12 பப்ளிக் பீட்டாவை பதிவிறக்கம் செய்யும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளது.
கடந்த மாதம் வெளியான முதல் iOS 12 பப்ளிக் பீட்டாவை ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்கள், செட்டிங்ஸ் > ஜெனரல் > சாஃப்ட்வேர் அப்டேட் சென்று பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பதிவிறக்கத்தின் போது, ஃபோனில் குறைந்தது 50% பேட்டரி இருப்பது அவசியம். அதன் பின்னர், ஆட்டோமாடிக் அப்டேட்ஸ் ஆப்ஷன் மூலம், இனி வரும் பீட்டா அப்டேட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
tvOS பப்ளிக் பீட்டா 2 பதிவிறக்கம் செய்வது எப்படி?
iOS 12 பப்ளிக் பீட்டாவை தவிர, tvOS பப்ளிக் பீட்டா 2-ஐயும் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. செட்டிங்ஸ் > ஜெனரல் > சாஃப்ட்வேர் அப்டேட் சென்று பப்ளிக் பீட்டாவை செயல்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம், முதல் iOS 12 பப்ளிக் பீட்டாவில் ஏற்பட்ட பிரச்னைகளை தீர்க்க முடியும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்