சீனாவில் தொடர்ந்து காற்று , நீர் மற்றும் நில மாசுபாடு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து தூய்மை எரிபொருள் சக்தியை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக முதற்கட்டமாக 300 மில்லியன் டாலர் நிதியை ஆப்பிள் நிறுவனம் கொடுக்க முன்வந்துள்ளது. இதன் மூலம் அடுத்த 4 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைக் தனது உற்பத்தியாளர்களுக்கு கொடுக்க ஆப்பிள் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஆப்பிள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆப்பிள் மற்றும் 10 பெரிய நிறுவனங்கள் இணைந்து தூய்மை எரிபொருளுக்கான நிதியை ஒதுக்கி உள்ளன. இதன் மூலம், சீனா தயாரிப்பாளர்கள் மாற்று எரிபொருள் சக்தியை பயன்படுத்த முதற்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம் முதற்கட்டமாக தயாரிக்கப்படும் 1 ஜிகாவாட் தூய்மை சக்தியின் மூலம், பத்துலட்சம் வீடுகளுக்கு மின்சார வசதி ஏற்படுத்த முடியும்.
ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பான்மையான தயாரிப்புகள் சீனாவில்தான் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம் அங்கு பல லட்சம் வாடிக்கையாளர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இதனால், அந்நிறுவனம் அங்கு கார்பன் வெளியீட்டை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையகத்தில் 100 % தூய்மை எரிசக்தி பயன்படுத்தப்படுவதைப் போல, ஆப்பிளின் தொழிற்சாலைகளிலும் அது பின்பற்றப்பட வேண்டுமென ஆப்பிள் முடிவு செய்துள்ளது.
சீனாவில் கடந்த 4 தலைமுறைகளாக தொழிற்புரட்சியால், இயற்கை வளங்கள் கடுமையாக மாசடைந்துள்ளன. எனவே, இதைத் தவிர்க்க சீன அரசு தூய்மை எரிபொருளை பயன்படுத்த ஊக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்