Photo Credit: Google
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Android 16 பற்றி தான்.
கூகுள் பகிர்ந்துள்ள விவரங்களின்படி Android 16 2025 முதல் பாதியில் வெளியிடப்படும். அக்டோபரில் வெளியிட்ட சமீபத்திய பதிப்பைப் போலன்றி, கூகிள் அதன் அடுத்த பெரிய ஆண்ட்ராய்டு பதிப்பை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடும். இது ஆப்ஸ் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் அதே வேளையில், பயனர்களுக்கு புதிய அம்சங்களைக் கொண்டு வரும். இனி அடிக்கடி ஆண்ட்ராய்டு மென்பொருள் மேம்பாட்டு கிட் (SDK) வெளியீடு இருக்கும் என கூகிள் நிறுவனம் கூறியுள்ளது.
ஆண்ட்ராய்டு டெவலப்பர்கள் வலைப்பதிவில் 2025 இரண்டாவது காலாண்டில் ஒரு பெரிய வெளியீட்டைக் கொண்டிருக்கும் என்று கூகுள் நிறுவனம் கூறுகிறது, அதைத் தொடர்ந்து நான்காவது காலாண்டில் ஒரு சிறிய வெளியீடு இருக்கும். ஆண்ட்ராய்டு 16 தகுதியான சாதனங்களுக்கு படிப்படியாக சென்று சேரும். இரண்டாவது காலாண்டில் வெளியாகும் அப்டேட் APIகள் மற்றும் புதிய அம்சங்களை உள்ளடக்கும் என்று Google தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டின் புதிய பதிப்பில் ஒரு பெரிய SDK வெளியீட்டை மட்டுமே நிறுவனம் அறிமுகப்படுத்துவதால், ஆண்ட்ராய்டு 16 வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 16 வெளியிடப்பட்ட பிறகு, கூகுள் 2025 ஆம் ஆண்டு Q3ல் புதுப்பிப்புகளை வெளியிடும். அதைத் தொடர்ந்து சிறிய ஆண்ட்ராய்டு 16 SDK Q4 2025ல் வெளியிடப்படும். இந்த வெளியீட்டில் புதிய APIகள் மற்றும் அம்சங்கள் இருக்கும். இப்போதைக்கு டெவலப்பர்கள் மற்றும் ஆர்வலர்கள் விரைவில் Android 16ஐ சோதிக்க முடியும். Google நிறுவனம் ஆண்ட்ராய்டு 16 அறிமுகப்படுத்துவதற்கு இன்னும் ஐந்து மாதங்கள் உள்ளன.
ஆண்ட்ராய்டு 16 ஸ்கிரீன் ரெக்கார்டர் மற்றும் ஸ்கிரீன்காஸ்டர் வசதியை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 16 அறிவிப்புகளைக் கையாளும் விதமும் மாறலாம். அறிக்கையின்படி, ஐகானுக்குப் பதிலாக சாதனத்தின் மேற்புறத்தில் பயனுள்ள தகவல்களை ஆப்ஸ் காட்ட ஸ்டேட்டஸ் பார் மேம்படுத்தப்படலாம். நீங்கள் எப்போதாவது உங்கள் Android இல் Linux பயன்பாடுகளை இயக்க விரும்பினால், OS இன் இந்தப் பதிப்பு அதை சப்போர்ட் செய்யும். ஒரு புதிய டெர்மினல் ஆப்ஸ் ஆண்ட்ராய்டு 16ல் இருக்கிறது. இது ChromeOS மூலம் உங்களால் இயன்ற Linux ஆப்ஸை நிறுவ அனுமதிக்கிறது.
கூடுதல் AI அம்சங்கள் மற்றும் தனியுரிமை அம்சங்கள் Android 16ல் இருக்கும். மேலும், Find My Device மேம்பாடுகள், கேமரா மேம்பாடுகள், சிறந்த டெஸ்க்டாப் பயன்முறை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள், சாம்சங், ஒன்பிளஸ், மோட்டோரோலா, நத்திங், ஒப்போ, சியோமி மற்றும் பிற உற்பத்தியாளர்கள் உட்பட பல சாதனங்கள் ஆண்ட்ராய்டு 16 புதுப்பிப்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்