Photo Credit: Google
Android Q இப்போது Android 10 மட்டுமே, தனது புதிய ஆண்ட்ராய்ட் வெர்சன்களுக்கு இனிப்புகளின் பெயரை பெயரிடும் 10 ஆண்டு கால வரலாற்றை மாற்றி அமைத்துள்ளது கூகுள். கடந்த வியாழக்கிழமை, கூகுள் தனது அடுத்த ஆண்ட்ராய்ட் வெர்சன் ஆண்ட்ராய்ட் 10 என்று மட்டுமே அழைக்கப்படும் என அறிவித்துள்ளது. உலகளாவிய பயனர்களுக்கு இது தெளிவாகவும் தொடர்புடையதாகவும் இருக்க ஆண்ட்ராய்டு வெளியீடுகளுக்கு பெயரிடும் முறையை மாற்றுவதாக கூகுள் குறிப்பிட்டுள்ளது. இப்போது வரை, ஒவ்வொரு வெர்சனிற்கும் அகர வரிசைப்படி சுவையான விருந்தளிப்புகள் அல்லது இனிப்பு வகைகளின் பெயரே பெயரிடப்பட்டிருந்தது.
அண்ட்ராய்ட் 10 புதிய லோகோவுடன் வெளியாகவுள்ளது. சிறந்த பார்வைக்காக இந்த லோகோவின் வண்ணம் பச்சை நிறத்தில் இருந்து கருப்பு நிறமாக மாற்றப்பட்டுள்ளது. இது ஒரு சிறிய மாற்றம், ஆனால் குறிப்பாக பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு பச்சை நிறத்தைப் படிக்க கடினமாக இருந்ததால் கூகுள் இந்த மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. அண்ட்ராய்ட் 10-ன் இறுதி வெளியீட்டில் வரும் வாரங்களில் கூகுள் அதிகாரப்பூர்வமாக இந்த புதுப்பிக்கப்பட்ட லோகோவை வெளியிடலாம்.
ஒரு அறிக்கையில் "முதலில், நாங்கள் எங்கள் வெளியீடுகளுக்கு பெயரிடும் முறையை மாற்றியுள்ளோம். எங்கள் பொறியியல் குழு எப்போதும் ஒவ்வொரு பதிப்பிற்கும் உள்ளக குறியீடு பெயர்களை சுவையான விருந்தளிப்புகள் அல்லது இனிப்புகளை அடிப்படையாகக் கொண்டு அகர வரிசைப்படி பயன்படுத்திக்கொண்டிருந்தது" என்று ஆண்ட்ராய்டின் தயாரிப்பு நிர்வாகத்தின் துணைத் தலைவர் சமீர் சமத் கூறினார்.
ஆண்ட்ராய்ட் லாலிபாப் அல்லது மார்ஷ்மெல்லோ போன்ற பெயரிடும் வழக்கம் ஒவ்வொரு ஆண்டும் வெளியீட்டின் ஒரு வேடிக்கையான பகுதியாக மாறிவிட்டது.
"உலகளாவிய இயக்க முறைமையாக, இந்த பெயர்கள் உலகில் உள்ள அனைவருக்கும் தெளிவானவை மற்றும் தொடர்புபடுத்தக்கூடியவையாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். ஆகவே, இந்த அடுத்த ஆண்ட்ராய்ட் வெளியீடு பதிப்பு எண்ணைப் பயன்படுத்தி அண்ட்ராய்ட் 10 என அழைக்கப்படும்" என்று சமத் விளக்கினார்.
"பல கவர்ச்சியான 'Q' இனிப்புகள் இருந்தபோதிலும், இந்த மாற்றத்திற்கான நேரம் இது என்று நாங்கள் நினைக்கிறோம்," என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு அண்ட்ராய்ட் 10 ஆகவும், அடுத்த ஆண்டு ஆண்ட்ராய்டு 11 ஆகவும், அதன்பின் அப்படியாகவே தொடரும்
நினைவுகூர, ஆண்ட்ராய்டின் பொதுவில் கிடைக்கக்கூடிய முதல் பதிப்பு 'ஆண்ட்ராய்ட் 1.5 - கப்கேக்' என பெயரிடப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் பிற ஆண்ட்ராய்ட் பதிப்புகள் எந்த இனிப்பின் பெயரில் பெயரிடப்பட்டுள்ளன என்பதைப் பாருங்கள்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்