அமேசான் போன்ற ஆன்லைன் சந்தைகளில் அதிரடி ஆஃபர்களை கொடுத்து வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறோம் என்று தெரிவித்தார்
புதிய ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு எச்டிஎப்சியில் கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடி
ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் தனது விழாக்கால தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. இதில் ஹானர் 8X, ஹானர் பிளே, ஹானர் 7C உள்ளிட்ட மொபைல்கள் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் கிடைக்கிறது. இந்த விற்பனையானது நவ.2 முதல் 5 வரை நடைபெற உள்ளது.
ஹானர் ஆன்லைன் ஸ்டோர்களிலும், ஹானர் 9N, ஹானர் 10, ஹானர் 9 லைட், ஹானர் 9A, ஹானர் 7s, ஹானர் 7c, ஹானர் 7x உள்ளிட்ட ஹானர் ஸ்மார்ட்போன் மாடல்கள் கிடைக்கின்றன. இதில் எச்டிஎப்சி வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு உடனடி 10 சதவீத தள்ளுபடியும், அமேசான் பே மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு 10 சதவீத கேஷ்பேக் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.
மற்ற மாடல்களை தவிர்த்து,ஹானர் 8X அமேசான் கிரேட் இந்தியன் சேலில் வாங்கும்போது ஹெச்.டி.எஃப்.சி வாடிக்கையாளர்கள் 10 சதவீத தள்ளுபடி மற்றும் அமேசான் பேயில் 10 சதவீத கேஷ் பேக்கினை பெறலாம்.
கடந்த மாதம் இந்தியாவில் வெளியான ஹானர் 8X 4ஜிபி ரேம்/64ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம்/128ஜிபி ஸ்டோரேஜ் என இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 4ஜிபி ரேம்/64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ.14,999 ஆகும். 6ஜிபி ரேம்/128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ.16,999 ஆகும்.
அமேசான் சேலில் ஹானர் பிளே 4ஜிபி ரேம்/64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் போனின் விலை ரூ.17,999 ஆகும். ஹானர் 7சி 3ஜிபி ரேம்/32ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் கொண்ட போனின் வழக்கமான விலையிலிருந்து ரூபாய் 1500 தள்ளுபடி செய்யப்பட்டு 8,499க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஹானர் ஸ்டோர் மூலம் ‘ஹானர் டிலைட்ஃபுல் சேல்' ஏற்கனவே நடைபெற்று வருகிறது. நவம்.7 ஆம் தேதியுடன் இந்த சேல் முடிவடைகிறது. இது குறித்து துணைத்தலைவர் பி.சஞ்சீவ் பேசுகையில், இந்தியாவில் ஹானர் போன்கள் இரண்டு சுற்றுகள் வெற்றிகரமாக விற்பனையானதை தொடர்ந்து, இந்த சேலிலும் வாடிக்கையாளரிடையே வரவேற்பை பெறும் என்று எதிர்பார்கிறோம்.
ஹானர் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாகும். அமேசான் போன்ற ஆன்லைன் சந்தைகளில் அதிரடி ஆஃபர்களை கொடுத்து வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Magnetic Control of Lithium Enables Safer, High-Capacity “Dream Battery” Without Explosion Risk