2020-ஆம் ஆண்டுக்கான தனது முதல் கிரேட் இந்தியன் விற்பனையை அமேசான் அறிவித்துள்ளது. மேலும், விற்பனை காலத்தில் இ-காமர்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன்களில் 40 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்குகிறது. Oppo, Samsung, Xiaomi, Realme, LG மற்றும் Vivo போன்ற பிராண்டுகள் தங்கள் போன்களை ஒப்பந்தங்கள் மற்றும் தள்ளுபடிகளுடன் பட்டியலிட்டுள்ளன. மேலும், மாதம் ரூ. 833 முதல் EMI ஆப்ஷன்கள் உள்ளன. SBI வங்கியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியை வழங்க அமேசான் இந்தியாவும் SBI வங்கியுடன் கூட்டு சேர்ந்துள்ளது. அமேசான் கிரேட் இந்தியன் சேல் ஜனவரி 19-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 22 வரை நடைபெறும்.
பிரைம் உறுப்பினர்களுக்கு, அமேசான் கிரேட் இந்தியா சேல் 12 மணி நேரத்திற்கு முன்னதாக தொடங்கும். அதாவது, ஜனவரி 18 அன்று மதியம் 12 மணிக்கு. Redmi Note 8 Pro போன்ற புதிய போன்கள் விலைக் குறைப்புகளைக் காணும். மேலும், OnePlus 7T, 12 மாதங்கள் வரை no-cost EMI மற்றும் எக்ஸ்சேஞ்-ல் கூடுதல் தள்ளுபடியுடன் பட்டியலிடப்படும். Samsung Galaxy M30 மற்றும் Vivo U20 போன்களும் விற்பனை காலத்தில் விலைக் குறைப்புகளைக் காணும். Apple-ன் iPhone XR, ‘சிறந்த சலுகைகள்' விவரங்களுடன் பட்டியலிடப்பட்டு, விரைவில் வெளியிடப்படும். ஆன்லைன் சில்லறை விற்பனையாளர், அமேசான் விற்பனையின் ஸ்மார்ட்போன் ஒப்பந்தங்களை HMD Global, Realme, Huawei, Honor, Oppo மற்றும் LG விரைவில் வெளியிடும். இந்த விற்பனையில் மொபைல் பாகங்கள் ரூ. 69-க்கு விற்பனை செய்யப்படும். எலக்ட்ரானிக்ஸ் பிராண்டுகளான HP, JBL, Bose, Sony மற்றும் பல பிராண்டுகள் இந்த விற்பனையில் பங்கேற்கும்.
SBI கிரெடிட் கார்டுகள் மற்றும் EMI உடனான 10 சதவீத உடனடி தள்ளுபடியுடன், ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு no-cost EMI ஆப்ஷன்கள் மற்றும் சிறப்பு எக்ஸ்சேஞ் பலன்கள் வழங்கப்படும். Echo வரம்பில் உள்ள அமேசான் சாதனங்கள், FireTV Stick மற்றும் Kindle e-readers, 45 சதவீதம் வரை தள்ளுபடியுடன் பட்டியலிடப்படும் என்று அமேசான் கூறுகிறது. Echo Input portable ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் Onida Fire TV Edition smart TVs-ம் சலுகைகளுடன் பட்டியலிடப்படும். அமேசான் கிரேட் இந்தியன் விற்பனைக்கு, e-tailer, ஒரு பக்கத்தை அர்ப்பணித்துள்ளது. அங்கு நீங்கள் அனைத்து ஒப்பந்தங்களையும் காணலாம். நிறுவனம் ஒவ்வொரு வகை பக்கத்தையும் (category page) வரும் நாட்களில் விரிவுபடுத்தும். மேலும், அமேசான் விற்பனை நெருங்கி வருவதால் கூடுதல் விவரங்களை விரைவில் வெளிப்படுத்தும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்