ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடக்கவுள்ள அமேசான் Great Freedom Festival Sale 2024 விற்பனை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 
                Photo Credit: Gadgets 360
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Amazon Great Freedom Festival Sale பற்றி தான்.
ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடக்கவுள்ள Amazon Great Freedom Festival Sale 2024 விற்பனையின் போது உங்களுடைய முழு கவனமும் ஐபோன், சாம்சங் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் மீது மட்டுமே உள்ளதென்றால் நீங்கள் சரியான இடத்துக்கு தான் வந்துள்ளீர்கள். 2024 சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் தளத்தில் நடக்கும் இந்த சிறப்பு விற்பனையின் போது என்னென்ன செல்போன்கள் மீது என்னென்ன ஆபர் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
கிரெடிட் கார்டுகள் அல்லது EMI பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தும் SBI வாடிக்கையாளர்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடியைப் பெறலாம். Amazon Pay UPI பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் சலுகை கிடைக்கும்.
இதில் ஐபோன் 13(Phone 13 ) 256ஜிபி மாடலை குறைந்த விலையில் வாங்கலாம். அதன் உண்மையான விலை ரூ79,900 என்றால் ஆபரில் ரூ 47,900க்கு கிடைக்கும்.
Tecno Phantom V Fold போன்ற மடிக்கக்கூடிய ஆண்ட்ராய்டு கைபேசிகள் இப்போது ரூ. 88,888க்கு விற்பனை ஆகிறது. இதனை ரூ.53,999 என்கிற சலுகை விலையில் வாங்கலாம்.
Realme Narzo N61 6GB + 128GB பட்ஜெட் போன்கள் ரூ. 8,499 விலையில் விற்கப்படுகிறது. இதனை ரூ. 6,999க்கு வாங்கலாம்.
இது தவிர பிரைம் உறுப்பினர்கள் விற்பனைக்கான ஆரம்ப அணுகலை பெறலாம். இந்த சலுகைகள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள அமேசானின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த விற்பனை ஆகஸ்ட் 6 மதியம் தொடங்கிவிட்டது. பிரைம் உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே தள்ளுபடிகள் போய் கொண்டிருக்கிறது.
| செல்போன் மாடல் | உண்மையான விலை | ஆபர் விலை | 
| Tecno Phantom V Fold | Rs. 88,888 | Rs. 53,999 | 
| iPhone 13 | Rs. 79,900 | Rs. 47,900 | 
| Motorola Razr 40 Ultra | Rs. 89,999 | Rs. 45,999 | 
| OnePlus 12R | Rs. 42,999 | Rs. 39,999 | 
| iQoo Neo 9 Pro 5G | Rs. 39,999 | Rs. 31,999 | 
| Honor 200 | Rs. 39,999 | Rs. 29,999 | 
| OnePlus Nord 4 5G | Rs. 29,999 | Rs. 27,999 | 
| Realme GT 6T 5G | Rs. 30,999 | Rs. 25,999 | 
| Samsung Galaxy S21 FE 2023 | Rs. 49,999 | Rs. 24,999 | 
| OnePlus Nord CE 4 | Rs. 24,999 | Rs. 21,999 | 
| OnePlus Nord CE 4 Lite | Rs. 19,999 | Rs. 16,999 | 
| iQoo Z9 5G | Rs. 19,999 | Rs. 16,999 | 
| Lava Blaze X | Rs. 16,999 | Rs. 13,249 | 
| iQoo Z9 Lite 5G | Rs. 10,499 | Rs. 9,999 | 
| Realme Narzo N61 | Rs. 8,499 | Rs. 6,999 | 
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
 Starlink Hiring for Payments, Tax and Accounting Roles in Bengaluru as Firm Prepares for Launch in India
                            
                            
                                Starlink Hiring for Payments, Tax and Accounting Roles in Bengaluru as Firm Prepares for Launch in India
                            
                        
                     Google's 'Min Mode' for Always-on Display Mode Spotted in Development on Android 17: Report
                            
                            
                                Google's 'Min Mode' for Always-on Display Mode Spotted in Development on Android 17: Report
                            
                        
                     OpenAI Upgrades Sora App With Character Cameos, Video Stitching and Leaderboard
                            
                            
                                OpenAI Upgrades Sora App With Character Cameos, Video Stitching and Leaderboard
                            
                        
                     Samsung's AI-Powered Priority Notifications Spotted in New One UI 8.5 Leak
                            
                            
                                Samsung's AI-Powered Priority Notifications Spotted in New One UI 8.5 Leak