அமேசான் நிறுவனம் வருகின்ற திங்கட்கிழமையன்று சலுகை விலையில் மொபைல்போன்கள் விற்பனை நடத்தவுள்ளது. 'அமேசான் ஃபேப் போன் ஃபெஸ்ட்' என பெயரிடப்பட்டுள்ள இந்த விற்பனை ஜூன் 13 வரை தொடரவுள்ளது. ஒன்ப்ளஸ் 6T, ஐபோன் X, சாம்சங் கெலக்சி M30, ஹவாய் P30 Pro ஆகிய ஸ்மார்ட்போன்களே இந்த விற்பனையில் அதிக சலுகைகளை பெற்றிருக்கும் மொபைல்போன்கள். சாம்சங் M20, ஹானர் 9N, ரெட்மீ 7 என இன்னும் பல ஸ்மார்ட்போன்கள் இந்த விற்பனையில் சலுகைகளைப் பெற்றுள்ளன.
32,999 ரூபாயாக இருந்த ஒன்ப்ளஸ் 6T-யின் விலையை 27,999 ரூபாயாக குறைத்திருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 8GB RAM + 128GB சேமிப்பு அளவை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங் கெலக்சி M30-யும் அதிரடி சலுகையை பெற்றுள்ளது. அதன்படி, 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட ஸ்மார்ட்போனின் விலை, 14,990 ரூபாய், இதன் மற்றொரு வகையான 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட ஸ்மார்ட்போனின் விலை 17,990 ரூபாய்.
விற்பனையில் சலுகைகளை பெற்றிருக்கும் பட்ஜெட் போன்கள்
இந்த விற்பனையில் அதிக அளவிலான பட்ஜெட் போன்கள் சலுகைகளை பெற்றுள்ளது. அந்த வகையில், சாம்சங் M20, ஹானர் 9N, விவோ Y91i, எம் ஐ A2 4GB, ரெட்மீ 7, ஓப்போ A5 ஆகிய ஸ்மார்ட்போன்கள் சலுகை விலையில் விற்பனையாகவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி ஐபோன் X, ஹவாய் P30 Pro, விவோ நெக்ஸ், ஒப்போ R17, கேலக்சி நோட் 9 ஆகிய ஸ்மார்ட்போன்களும் விலைக் குறைப்பை பெற்றுள்ளது.
இந்த விற்பனையில், மொபைல் சாதனங்கள், மொபைல் கவர்கள் மற்றும் பல பொருட்களை இந்த விற்பனையில் விற்பனையாகவுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்