மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய G-சீரிஸ் மாடல்களான Moto G67 மற்றும் G77-ஐ விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
Photo Credit: Motorola
மோட்டோ ஜி67 மற்றும் மோட்டோ ஜி77 ஆகியவை தோல் அமைப்பு கொண்ட பின்புற பேனலைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது.
மோட்டோரோலா (Motorola) இப்போ செம ஸ்பீடுல இருக்காங்கன்னு தான் சொல்லணும். ஒரு பக்கம் அவங்களோட பிரீமியம் 'Signature' போனை லான்ச் பண்ண ரெடி ஆகிட்டு இருக்க, இன்னொரு பக்கம் நம்ம பட்ஜெட் பிரியர்களுக்காக Moto G67 மற்றும் Moto G77-ஐ களமிறக்க போறாங்க. ஆனா, இந்த போன்கள் லான்ச் ஆகுறதுக்கு முன்னாடியே ஒரு கிரேக்க நாட்டு ஆன்லைன் ஷாப்பிங் சைட்ல (Insomnia) இதன் முழு ஜாதகமும் கசிஞ்சு டெக் உலகத்தையே பரபரப்பாக்கி இருக்கு. "இது பட்ஜெட் போனா இல்ல பிரீமியம் போனா?"னு கேக்குற அளவுக்கு அப்படி என்ன ஸ்பெஷல்? வாங்க பார்ப்போம்!
வழக்கமா மோட்டோரோலாவோட G-சீரிஸ்ல LCD ஸ்கிரீன் தான் வரும், ஆனா இந்த முறை ஒரு பெரிய மாற்றமா G67 மற்றும் G77 ரெண்டுலயுமே 6.8-இன்ச் 1.5K Extreme AMOLED டிஸ்ப்ளே கொடுத்திருக்காங்க. இதுல 120Hz ரிஃப்ரெஷ் ரேட் மற்றும் 5,000 nits வரைக்கும் பீக் பிரைட்னஸ் இருக்கு. அதாவது உச்சி வெயில்ல நின்னு போன் பார்த்தா கூட டிஸ்ப்ளே அம்புட்டு பளிச்சுன்னு தெரியும். பாதுகாப்பிற்கு Corning Gorilla Glass 7i வேற இருக்கு.
இந்த ரெண்டு போன்களுக்கும் இருக்குற பெரிய வித்தியாசமே கேமரா தான்.
● Moto G67: இதுல 50MP Sony LYT-600 பிரைமரி சென்சார் இருக்கு. குவாலிட்டியான லோ-லைட் போட்டோஸ்க்கு இது செமையா இருக்கும்.
● Moto G77: இதான் இந்த சீரிஸோட கிங்! இதுல 108MP மெயின் கேமரா குடுத்திருக்காங்க. ரெண்டு போன்லயும் 8MP அல்ட்ரா-வைட் மற்றும் செல்பிக்காக 32MP கேமரா இருக்கு.
பெர்ஃபார்மென்ஸ்க்குன்னு பார்த்தா, G67-ல Dimensity 6300 சிப்செட்டும், G77-ல கொஞ்சம் பவர்ஃபுல்லான Dimensity 6400 சிப்செட்டும் பயன்படுத்தப்பட்டிருக்கு. RAM & Storage: G67-ல 4GB RAM-ம், G77-ல 8GB RAM-ம் வரப்போகுது. ரெண்டுலயுமே 128GB ஸ்டோரேஜ் மற்றும் 2TB வரை மெமரி கார்டு போட்டுக்கிற வசதி இருக்கு.
முக்கியமான விஷயம், இது லேட்டஸ்ட் Android 16 (Hello UI) ஓஎஸ்-ல ரன் ஆகுது.
ரெண்டு போன்லயுமே 5,200mAh பேட்டரி மற்றும் 30W டர்போ பவர் சார்ஜிங் வசதி இருக்கு. டிசைன் பொறுத்தவரை லெதர் பினிஷ் (Vegan Leather) மற்றும் மெலிதான 7.33mm தடிமன்ல பாக்குறதுக்கு ரொம்ப பிரீமியமா இருக்கு. இதுல MIL-STD-810H மிலிட்டரி கிரேடு சர்டிபிகேஷன் மற்றும் IP64 ரேட்டிங் இருக்குறதால போன் செம ஸ்ட்ராங்கா இருக்கும்.
மோட்டோரோலா இந்த ஜனவரி மாசம் கடைசியிலயே இந்த போன்களை உலக சந்தையில லான்ச் பண்ணலாம்னு எதிர்பார்க்கப்படுது. இந்தியாவில் பிப்ரவரி தொடக்கத்துல வர வாய்ப்பு இருக்கு. ₹15,000 முதல் ₹20,000 பட்ஜெட்டுக்குள்ள இது ஒரு தரமான ஆல்-ரவுண்டர் போனா அமையும்.
இந்த கசிந்த விவரங்களை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? G77-ல 108MP கேமரா உங்களுக்கு பிடிச்சிருக்கா? கமெண்ட்ல சொல்லுங்க மக்களே.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Shambala Now Streaming Online: What You Need to Know About Aadi Saikumar Starrer Movie
Microsoft CEO Satya Nadella Says AI’s Real Test Is Whether It Reaches Beyond Big Tech: Report