Photo Credit: Honor
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Honor X7c 4G செல்போன் பற்றி தான்.
Honor X7c 4G செல்போன் வெளியீடு இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் அதற்கு முன்னதாக முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன. Snapdragon 685 SoC சிப் மூலம் இயங்குகிறது. 5,200mAh பேட்டரியுடன் வருகிறது. இது கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை வண்ணத்தில் வெளியாகும் என தெரிகிறது. 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கேமராவை கொண்டிருக்கும். Honor X7c ஆனது Honor X7b செல்போனுக்கு அடுத்த அப்டேட்டாக வரும் என நம்பப்படுகிறது.
91Mobiles வெளியிட்ட தகவல்படி, Honor X7c செல்போன் கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் இருப்பது உறுதியாகிறது. பச்சை மற்றும் வெள்ளை நிற மாடல்கலில் உறுதியான பின்பக்க பேனல்களைக் கொண்டதாகத் தெரிகிறது. மேலும் தட்டையான விளிம்புகளுடன் பஞ்ச்-ஹோல் அமைப்புடன் செல்போன் வடிவமைப்பு இருக்கிறது.
ஹானர் X7c செல்போன் மேல் இடது மூலையில் ஒரு சதுர வடிவ கேமரா யூனிட் இருக்கிறது. செல்போனின் வலது பக்கம் பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் இருக்கும் என கூறப்படுகிறது.
அறிக்கையின்படி, Honor X7c ஆனது Andorid 14-அடிப்படையிலான MagicOS 8.0 மூலம் இயங்கும். 120Hz புதுப்பிப்பு வீதம், 261ppi பிக்சல் அடர்த்தி கொண்ட 6.77-இன்ச் IPS டிஸ்ப்ளே (720x1,610 தீர்மானம்) இருக்கும் என தெரிகிறது. Honor X7b போலவே ஸ்னாப்டிராகன் 685 சிப்செட்டில் இது இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரியுடன் வரலாம்.
கேமராவை பொறுத்தவரையில், Honor X7c ஆனது 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் கேமராவை உள்ளடக்கிய இரட்டை பின்புற கேமரா யூனிட்டை கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு 8 மெகாபிக்சல் முன் கேமரா வரும். பாதுகாப்பு வசதிக்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் இருக்கும் என கூறப்படுகிறது.
Honor X7c 4G ஆனது 35W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் 5,200mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று அறிக்கை மேலும் கூறுகிறது. இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP64-மதிப்பிடப்பட்ட கட்டமைப்பைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. ஃபோனில் உள்ள இணைப்பு விருப்பங்களில் NFC, ப்ளூடூத் 5.0, Wi-Fi 5, USB Type-C மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவை அடங்கும். இது 191 கிராம் எடையுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்