Photo Credit: Motorola
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது Moto G55 மற்றும் Moto G35 செல்போன் பற்றி தான்.
Lenovo நிறுவனத்துக்கு சொந்தமான பிராண்டான Moto G55 மற்றும் Moto G35 ஆகியவை சமீபத்திய பட்ஜெட் சலுகையாக ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டன. Moto G55 மீடியாடெக் டைமென்சிட்டி 7025 சிப்செட்டில் இயங்குகிறது. Moto G35 மாடல் Unisoc T760 சிப்செட் மூலம் இயங்குகிறது. 50-மெகாபிக்சல் பிரதான சென்சார் கேமரா மற்றும் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளன. மேலும் இரட்டை பின்புற கேமரா யூனிட்டை கொண்டுள்ளன.
Moto G55 விலை ஐரோப்பாவில் வெளியானதை வைத்து பார்த்தால் தோராயமாக ரூ. 24,000 இருக்கும் என தெரிகிறது. இது ஃபாரஸ்ட் கிரே, ஸ்மோக்கி கிரீன் மற்றும் ட்விலைட் பர்பிள் நிறங்களில் கிடைக்கிறது.
மறுபுறம் Moto G35 விலை தோராயமாக ரூ. 19,000 இருக்கும் என எதிர்பார்க்கலாம். இது இலை பச்சை, கொய்யா சிவப்பு, மிட்நைட் பிளாக் மற்றும் சேஜ் கிரீன் வண்ணங்களில் வழங்கப்படுகிறது. இரண்டு செல்போன்களும் அமெரிக்கா மற்றும் ஆசியா-பசிபிக் சந்தைகளில் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரட்டை சிம் (Nano+eSIM) கொண்ட Moto G55 ஆனது ஆண்ட்ராய்டு 14 உடன் வருகிறது. 6.49-இன்ச் முழு-HD+ LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 20:9 விகிதத்தைக் கொண்டுள்ளது. டிஸ்ப்ளே 405ppi பிக்சல் அடர்த்தி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொண்டுள்ளது.
Moto G55 ஆனது ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 மூலம் இயக்கப்படுகிறது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரியை கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் 1TB வரை மெமரியை விரிவாக்கலாம். இது இரட்டை பின்புற கேமரா யூனிட் கொண்டுள்ளது. இதில் OIS வசதியுடன் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் சென்சார் கேமரா இருக்கிறது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகள் மேற்கொள்ள 16 மெகாபிக்சல் முன் பக்க கேமரா இருக்கிறது.
Moto G55 மாடலில் ப்ளூடூத் 5.3, FM ரேடியோ, NFC, GPS, A-GPS, LTEPP, GLONASS, Galileo, QZSS, Beidou, Wi-Fi 802.11 a/b/g/n/ac, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகிய இணைப்பு வசதிகள் இருக்கிறது. USB Type-C போர்ட் மூலம் சார்ஜ் ஆகும். பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சத்தை சப்போர்ட் செய்கிறது. Dolby Atmos ஒலி தொழில்நுட்பத்துடன் கூடிய இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. 33W சார்ஜிங் சப்போர்ட்டுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 179 கிராம் எடை கொண்டது.
Moto G35 மாடல் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 1000நிட்ஸ் உச்ச பிரகாச நிலை கொண்ட பெரிய 6.7-இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது Unisoc T760 சிப்செட்டில் இயங்குகிறது. 8ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி மெமரியை கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் மெமரியை 1TB வரை விரிவாக்கலாம்.
கேமராவை பொறுத்தவரையில் Moto G35 மடலில் 50-மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா யூனிட் இருக்கிறது. ஆனால் முக்கிய சென்சாரான OIS சப்போர்ட் இல்லை. 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் டால்பி அட்மாஸ் உடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 188 கிராம் எடையுடையது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்