Infinix Hot 40i செல்போனின் அப்டேட் செய்யப்பட்ட மாடலாக Infinix Hot 50i அறிமுகப்படுத்தப்பட்டது
Photo Credit: Infinix
Infinix Hot 50i runs on Android 14-based XOS 14.5
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Infinix Hot 50i செல்போன் பற்றி தான்.
Infinix Hot 40i செல்போனின் அப்டேட் செய்யப்பட்ட மாடலாக Infinix Hot 50i அறிமுகப்படுத்தப்பட்டது. MediaTek Helio G81 SoC சிப்செட், 5,000mAh பேட்டரியுடன் வருகிறது. Infinix Hot 50i ஆனது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் ஹோல் பஞ்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கேமராவுடன் இரட்டை பின்புற கேமரா யூனிட் அமைப்பைக் கொண்டுள்ளது. நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP54 மதிப்பீட்டை பெற்றுள்ளது.
Infinix Hot 50i ஆனது தற்போது நைஜீரியாவில் உள்ள இ-காமர்ஸ் இணையதளங்களில் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மாடல் தோராயமாக ரூ. 9,000 என்கிற விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இது சேஜ் கிரீன், ஸ்லீக் பிளாக் மற்றும் டைட்டானியம் கிரே வண்ணங்களில் கிடைக்கிறது.
Infinix Hot 50i செல்போன் இரட்டை சிம் (நானோ) வசதியுடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான XOS 14.5 மூலம் இயங்குகிறது. 6.7-இன்ச் HD+ (720x1,600 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 120Hz வரை புதுப்பிப்பு வீதம் மற்றும் 500 nits உச்ச பிரகாசத்துடன் இருக்கும். டிஸ்ப்ளேவில் செல்ஃபி ஷூட்டருக்கான துளையுடன் கூடிய பஞ்ச் கட்அவுட் இருக்கிறது. இது எப்போதும் சப்போர்ட் செய்யக்கூடிய டைனமிக் பார் அம்சத்தைக் கொண்டுள்ளது.
Infinix Hot 50i செல்போன் MediaTek Helio G81 SoC, 6GB LPDDR4X ரேம் மற்றும் 128GB மெமரியை கொண்டுள்ளது. Infinix நிறுவனத்தின் Memfusion RAM அம்சத்துடன் வருவதால் கூடுதல் பயன்படுத்தப்படாத மெமரியை பயன்படுத்தி போன் மெமரியி 16GB வரை விரிவாக்க முடியும். மைக்ரோ எஸ்டி கார்டைப் பயன்படுத்தி மெமரியி 2TB வரை விரிவாக்கலாம்.
கேமரா பொறுத்தவரையில் Infinix Hot 50i ஆனது இரட்டை ஃபிளாஷ் கொண்ட 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கேமராவுடன்இரட்டை பின்புற கேமரா யூனிட்டை கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால் மேற்கொள்ள 8 மெகாபிக்சல் முன் பக்க கேமரா இருக்கிறது.
Infinix Hot 50i செல்போனில் உள்ள இணைப்பு விருப்பங்களில் புளூடூத், FM ரேடியோ, 3.5mm ஆடியோ ஜாக், OTG, USB Type-C போர்ட் மற்றும் Wi-Fi 802.11 a/b/g/n/ac ஆகியவை அடங்கும். இது இ-காம்பஸ், ஜி-சென்சார், கைரோஸ்கோப், லைட் சென்சார் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் ஆகியவற்றுடன் வருகிறது. மேலும், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP54-மதிப்பீட்டை பெற்றுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
WhatsApp Working on 'Strict Account Settings' Feature to Protect Users From Cyberattacks: Report
Samsung Galaxy XR Headset Will Reportedly Launch in Additional Markets in 2026
Moto G57 Power With 7,000mAh Battery Launched Alongside Moto G57: Price, Specifications