Photo Credit: Tecno
Tecno Camon 30S செல்போன் Transsion நிறுவனத்தின் புதிய மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது 6.78-இன்ச் AMOLED திரையைக் கொண்டுள்ளது. 120Hz வேகத்தில் புதுப்பிக்கும் திறன் கொண்டது. இந்த செல்போன் MediaTek Helio G100 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 8GB வரை ரேம் கொண்டுள்ளது. Tecno Camon 30S செல்போனில் 50 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 13 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. Android 14 மூலம் இயங்குகிறது. 33W திறனில் சார்ஜ் செய்யக்கூடிய 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. Wi-Fi, NFC மற்றும் 4G இணைப்புக்கான சப்போர்ட் கொண்டுள்ளது.
Tecno Camon 30S 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரியுடன் கூடிய டாப்-ஆஃப்-லைன் மாடலின் விலைதோராயமாக ரூ. 18,200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம் 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் 128ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலையை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.
இந்த செல்போன் செலஸ்டியல் பிளாக், டான் கோல்ட் மற்றும் நெபுலா வயலட் வண்ணங்களில் Transsion நிறுவனத்தின் இணையதளம் வழியாக பாகிஸ்தானில் வாங்குவதற்கு கிடைக்கிறது . Tecno Camon 30S இந்தியாவில் வெளியிடப்படுமா என்பது குறித்து நிறுவனத்திடம் இருந்து எந்த தகவலும் இல்லை.
Tecno Camon 30S செல்போன் டூயல் சிம் வசதியை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 மூலம் இயங்குகிறது, அதன் மேல் நிறுவனத்தின் HiOS 14 ஸ்கின் உள்ளது. இது 6.78-இன்ச் முழு-HD+ (1,080x2,436 பிக்சல்கள்) வளைந்த AMOLED திரையை கொண்டுள்ளது. இது 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 1,300nits வரை உச்ச பிரகாசத்தை கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி100 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 8ஜிபி வரை ரேம் உள்ளது.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு இந்த Tecno Camon 30S செல்போனில் 2 மெகாபிக்சல் கேமரா டெப்த் சென்சார் கேமரா, சோனி IMX896 சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன்கூடிய 50 மெகாபிக்சல் முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது. முன்பக்கம் 13 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது ஹோல் பஞ்ச் கேமரா கட்அவுட்டில் டூயல் எல்இடி ப்ளாஷ் அமைப்புடன் உள்ளது.
Tecno Camon 30S செல்போன் 256GB வரை உள்ளடங்கிய மெமரியை கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS, NFC மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை உள்ளது. முடுக்கமானி, கைரோஸ்கோப், சுற்றுப்புற ஒளி சென்சார் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
33W வேகமான சார்ஜிங் சப்போர்ட் உடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான கைரேகை ஸ்கேனர் உள்ளது. இந்த கைபேசியானது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP53 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. இது தவிர Tecno Camon 30S செல்போன் 164.49x74.55x7.62mm அளவைக் கொண்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்