Photo Credit: Redmi
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட கேட்ஜெட் எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். செல்போன் தாண்டி மற்ற தொழில்நுட்ப தகவல்களும் உங்களை வந்து சேரும். இப்போ நாம் பார்க்க இருப்பது Redmi K80 Pro செல்போன் பற்றி தான்
Redmi K80 Pro கடந்த நவம்பரில் சீனாவில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப் மற்றும் 6,000mAh பேட்டரியுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது Redmi K90 Pro பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. வரவிருக்கும் ரெட்மி கே-சீரிஸ் செல்போன்கள் இரண்டாம் தலைமுறை ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதில் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவும் பொருத்தப்பட்டிருக்கலாம்.
டிப்ஸ்டர் டிஜிட்டல் என்கிற சீன தளத்தில் Redmi K தொடரின் அடுத்த தலைமுறை செல்போன் மாதிரியின் முக்கிய விவரங்கள் கசிந்துள்ளது. அதில் செல்போனின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்றாலும், அது Redmi K90 Pro ஆக இருக்கலாம் என்று தெரிய வருகிறது. இது ஒரு பெரிய துளையுடன் கூடிய 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவைக் கொண்டிருக்கும். 2K தெளிவுத்திறன் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கலாம்.
Redmi K90 Pro ஆனது Snapdragon 8 Elite 2 சிப்செட்டில் இயங்கும். இந்த சிப்செட் H2 2025ல் அறிவிக்கப்படும் என தெரிகிறது. ஸ்னாப்டிராகன் 8 எலைட்டின் செயல்திறன் மேம்படுத்தல்கள் Redmi K80 Pro மாடலில் இருக்கும். Redmi K90 Pro வெளியீடு இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் நடைபெறலாம் என கூறப்படுகிறது.
Redmi K80 Pro ஆனது ரூ. 43,000 விலையில் வெளிவந்தது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல் இந்த விலைக்கு கிடைத்தது. இது Xiaomi HyperOS 2.0 இல் இயங்குகிறது. 2K தெளிவுத்திறனுடன் 6.67-இன்ச்AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 3,200 nits உச்ச பிரகாசம் கொண்டுள்ளது. இது 16ஜிபி வரை LPDDR5X ரேம் மற்றும் 1TB வரை UFS 4.0 உள் சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது.இந்த செல்போனில் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 32 மெகாபிக்சல் சென்சார் ஆகியவை அடங்கும். இதில் 20 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் உள்ளது.
Redmi K80 Pro ஆனது, அங்கீகாரத்திற்கான அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் மற்றும் 120W வயர்டு சார்ஜிங் சப்போர்ட் மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்