1More நிறுவனம் ஹெட் போன்ஸ் சந்தையில் குறைந்த காலத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. 1More, ட்ரிபிள் டிரைவர் இன்-இயர் ஹெட்போன்ஸ் மூலம், அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த நிலையில், தற்போது 1More டூயல் டிரைவர் இன்-இயர் ஹெட்போன்ஸ் வெளியிடப்பட்டு உள்ளது.
ட்ரிபிள் டிரைவரின் விலை 8,999 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனால், அதனை வாங்குவது கொஞ்சம் கையைக் கடிக்கும். எனவே, ஹெட் போன்களுக்கு பெரிய தொகையை செலவு செய்ய முடியாதவர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு 3,999 ரூபாய்க்கு வந்துள்ளது டூயல் டிரைவர் இயர்- போன்ஸ்.
இந்த ஹெட் போன்களின் அதிகபட்ச எம்.ஆர்.பி விலை 4,499 ரூபாய் ஆகும். ஆனால், ஆன்லைனில் வாங்கினால், 3,999 ரூபாய் மட்டுமே வரும். அமேசான் போன்ற இணைய வர்த்தக தளங்களில் இதன் விற்பனை படு ஜோராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
iOS மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் இந்த ஹெட் போன்கள் நன்றாக வேலை செய்யக் கூடியவையே. அதிர்வுகளை தாங்கக் கூடிய வகையிலான நல்ல டிசைன் டூயல் டிரைவருக்கு பெரிய பலம். போனில் ஓடும் பாட்டுகளை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக மூன்று பட்டன்கள் கொண்ட அமைப்பு ஹெட் போனுக்கு கீழேயே கொடுக்கப்பட்டு உள்ளது. அதற்கு கீழே மைக் இருக்கிறது.
அழைப்புகளின் போதும், எதிர் திசையில் இருந்து பேசுபவர்களின் வாய்ஸ் துள்ளியமாகவே கேட்கின்றது. நான்கு ஜோடிகள் கொண்ட சிலிகான் இயர் டிப்ஸ், இந்த ஹெட் போன்ஸுடன் இணைந்து வருகிறது. காதுக்கு ஏற்றாற் போல் இதை மாற்றிக் கொள்ளலாம்.
இசையைக் கேட்கும் போது, ஒரு சாதரண ஹெட் போன்ஸுக்கும் இதற்குமான வித்தியாசத்தைத் துள்ளியமாக உணர முடியும்.
வாங்கலாமா… கூடாதா..؟
மொத்தத்தில் 3,999 ரூபாய் கொடுக்கலாமா؟ கூடாதா؟ என்றால், கண்டிப்பாக கொடுக்கலாம். இந்த சாதனத்தில் இருக்கும் வசதி, பில்ட் க்வாலிட்டி, கேட்கும் திறன் என்று எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு பார்த்தால், 4000 ரூபாய்க்கு குறைவாக இதை விட நல்ல ஹெட் போன்ஸ் கிடைப்பது கடினம் தான்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்