Photo Credit: Weibo
எம்ஐ நோட்புக் ஏர் 12.5 இஞ்ச் 2019 பற்றிய தகவல் வெளியான நிலையில் சியோமி தற்போது இரண்டு புதிய நோட்புக் தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. எம்ஐ நோட்புக் ஏர் 13.3 இஞ்ச் 2019 மற்றும் எம்ஐ நோட்புக் ஏர் 15.6 இஞ்ச் 2019 என இரண்டு தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது.
இன்டெல் கோர் ஐ5 சிபியு மற்றும் 8 ஜிபி ரேம் வசதியை இந்த மாடல் நோட்புக் தயாரிப்புகள் கொண்டுள்ளது. சீனாவில் வரும் ஏப்ரல் 9 முதல் எம்ஐ நோட்புக் ஏர் 15.6 இஞ்ச் 2019 தயாரிப்பு வெளியாகும் நிலையில், இன்று முதல் எம்ஐ நோட்புக் ஏர் 13.3 இஞ்ச் 2019 விற்பனைக்கு வெளியாகிறது.
விலை பட்டியலை பொருத்தவரை எம்ஐ நோட்புக் ஏர் 13.3 இஞ்ச் 2019 மாடல் ரூ.55,600 -க்கு விற்பனை செய்யபடுகிறது. 13.3 இஞ்ச் திரை, 8வது தலைமுறை இன்டெல் கோர் ஐ5 குவாட்கோர் பிராசஸ்சர் மற்றும் நீவிடியா ஜீஃவோர்ஸ் MX250 கிராபிக்ஸ் கார்டு இடம்பெற்றுள்ளது.
1.3 கிலோ எடையுள்ள இந்த மடிக்கணினி மிகவும் எளிய டிசைனை கொண்டுள்ளது. மேலும் இந்த மடிக்கணினியில் ஒரு மெட்டல் ஃபேன் பொருத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இந்த தயாரிப்பு வெப்பமடைவதை தவிர்க்க முடியும் என சியோமி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
எம்ஐ நோட்புக் ஏர் 15.6 இஞ்ச் 2019 பொருத்தவரை சீனாவில் இந்த மடிக்கணினிக்கு ரூ.44,300 வரைக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 15.6 இஞ்ச் ஹெச்டி திரை கொண்டுள்ள இந்த தயாரிப்பில் இன்டெல் கோர் ஐ5 குவாட்கோர் பிராசஸ்சர் மற்றும் நீவிடியா ஜீஃவோர்ஸ் MX110 GPU, 8ஜிபி ரேம் மற்றும் 256/512 ஜிபி SSD சேமிப்பு வசதிகளை பெற்றுள்ளது. எம்எஸ் ஆஃப்பிஸ் முன்கூட்டியே இடம்பெற்று வெளியாகுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் டிஜிடல் விசைப்பலகையும் இடம்பெற்றுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்