Photo Credit: Motorola
மோட்டோ புக் 60 விண்டோஸ் 11 ஹோம் இயக்க முறைமையில் இயங்குகிறது
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட கேட்ஜெட் எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். செல்போன் தாண்டி மற்ற தொழில்நுட்ப தகவல்களும் உங்களை வந்து சேரும். இப்போது நாம் பார்க்க இருப்பது லேப்டாப் மாடலான Moto Book 60 பற்றி தான்.மோட்டோரோலா இந்தியாவில் தனது முதல் லேப்டாப் மாடலான மோட்டோ புக் 60-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த லேப்டாப் பல முன்னேற்றப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் வருகிறது. இதில் 14 இன்ச் அளவிலான 2.8K OLED திரை தரப்பட்டுள்ளதுடன், 120Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பிரகாசத்துடன் வெளியாகியுள்ளது. இதில் Intel Core 5 மற்றும் Core 7 240H செயலிகள், 32GB வரை DDR5 RAM மற்றும் 1TB வரை PCIe 4.0 SSD சேமிப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன.மேலும், 100% DCI-P3 color gamut மற்றும் TÜV Rheinland சான்றளிக்கப்பட்ட blue light filter ஆகியவையும் இதில் வழங்கப்பட்டுள்ளன.
மோட்டோ புக் 60 லேப்டாப், Windows 11 Home இயங்குதளத்தில் இயங்குகிறது. இதில் 1080p வெப்கேம், IR கேமரா, Windows Hello மூலம் முகம் அடையாளம் காணும் வசதி உள்ளது. இது பாதுகாப்பு மற்றும் வசதிக்காக மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 1080p குவாலிட்டி கொண்ட வெப்கேம் மற்றும் IR கேமரா போன்றவையும் இதில் வழங்கப்பட்டுள்ளன, இது வீடியோ கால்களுக்கு உகந்தது. இந்த லேப்டாப்பில் MIL-STD-810H ராணுவ தரநிலைக்கு ஏற்ப கட்டமைக்கப்பட்டு உள்ளது, எனவே இது மேலும் திடமாக இருக்கும். மேலும், Dolby Atmos ஆதரவுடன் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், Bluetooth 5.4, Wi-Fi 7 போன்ற இணைப்பு தொழில்நுட்பங்கள் கொண்டுள்ளது.
இது மட்டுமல்லாமல், USB Type-A, USB Type-C, HDMI, microSD கார்டு ஸ்லாட் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் உள்ளிட்ட பலவகை இணைப்பு விருப்பங்களும் இதில் உள்ளன. AI அடிப்படையிலான Smart Connect, Smart Clipboard, File Transfer போன்ற அம்சங்கள் இதன் சிறப்பம்சங்களில் ஒன்று. 60Wh பேட்டரி மற்றும் 65W வேகமான சார்ஜிங் வசதி கொண்ட இந்த லேப்டாப், 1.39 கிலோ எடையுடன் வருகிறது.
இந்த லேப்டாப் Bronze Green மற்றும் Wedgewood என்ற இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. விலை ₹69,999 முதல் ஆரம்பமாகிறது, அறிமுக சலுகையாக ₹61,999-க்கு கிடைக்கிறது. ஏப்ரல் 23 முதல் Flipkart இணையதளம் வழியாக விற்பனைக்காக வெளியாகும் இந்த மோட்டோ புக் 60, மோட்டோரோலாவின் டேப்லெட்கள், டிவிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களுடன் இணைந்து செயல்படுவதற்கான வசதியுடன் வருகிறது. இந்தியாவில் மோட்டோரோலாவின் முதல் லேப்டாப் இது என்பதால், இது ஒரு முக்கிய முன்னேற்றமான தருணமாகக் கருதப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்