ஷோமி எம்.ஐ. நோட் புக், எம்.ஐ. நோட்புக் ஹாரிஸன் எடிஷன் ஆகியவை இந்தியாவில் இன்று அதிகம் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்புகள் நடத்தப்பட்டன.
ஷோமியை பொருத்தளவில் சீனாவில் பல லேப்டாப், நோட்புக்குகளை அறிமுகம் செய்திருக்கிறது. அந்த நிறுவனம் இந்தியாவில் நோட் புக்கை லான்ச் செய்வது இதுவே முதன்முறையாகும்.
அடுத்த தலைமுறைக்கேற்ற பிராசஸர்கள் மற்றும் நீண்ட நேரம் நீடிக்கும் திறன் கொண்ட பேட்டரிகளை உள்ளடக்கியதாக இந்த நோட்புக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அறிமுகத்தை முன்னிட்டு சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இன்று நண்பகல் 12 மணிக்கு நேரடி ஒளிபரப்பு தொடங்கப்பட்டது. ஷோமியின் அதிகாரப்பூர் வ இணையதளம், பேஸ்புக் பக்கம் மற்றும் யூடியூப் சேனல்களில் நேரலையாக நோட்புக் லான்ச் செய்யப்பட்டன.
மொத்தம் 2 வகையான நோட்புக்குகளை ஷோமி இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. எம்.ஐ. நோட் புக்கை பொருத்தளவில் அதில் 10வது தலைமுறை இன்டல் கோர் ஐ 7 பிராசசர் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், இதன் பேட்டரி பவர் 12 மணி நேரத்திற்கு நீடிக்கும் என ஷோமி தெரிவித்துள்ளது. முழுக்க முழுக்க எச்.டி. டிஸ்ப்ளேயால் இந்த நோட்புக் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக ஹோரிசன் எடிஷன். இந்த நோட்புக் 14 இன்ச் நீளம் உள்ள திரையை கொண்டது. டிடிஎஸ் ஆடியோ சப்போர்ட், ஸ்மால் எஸ்.டி. கார்டு மெமரி ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். இந்த நோட்புக்கும் 10வது ஜெனரேஷன் இன்டல் கோர் ஐ7 பிராசசர் கொண்டதாகவும், 12 மணி நேரம் நீடிக்கும் பேட்டரி திறனை உள்ளடக்கியதாகும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்