எம்ஐ நோட்புக்கில் “எபிக்” பேட்டரி செயல்திறன் இருக்கும் என்றும் டீஸரில் தெரிவிக்கப்படுகிறது.
விரைவில் இந்தியாவில் வெளியாகிறது எம்ஐ நோட்புக்; தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
இந்தியாவில் வரும் ஜூன் 11ம் தேதி அறிமுகமாகவுள்ள எம்ஐ நோட்புக் குறித்து அந்நிறுவனம் விளம்பரப்படுத்த துவங்கியுள்ளது. அதில், ஒருமுறை சார்ஜ் செய்தால், 12 மணி நேரம் வரை பேட்டரி திறன் இருக்கும் என தெரிவித்துள்ளது.
சியோமி ஏற்கனவே இந்திய சந்தைக்கான தனது எம்ஐ நோட்புக் மாடல் மெலிதான பெசல்களுடன் இருக்கும் என விளம்பரம் செய்திருந்தது. தற்போதுள்ள பிசி பிராண்டுகளான ஏசர், ஆசஸ், டெல், ஹெச்பி மற்றும் லெனோவா ஆகியவற்றின் வரிசையில் தனது எம்ஐ நோட்புக் மாடலையும் கொண்டு வருவதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்திய சந்தையில் சியோமி அறிமுகப்படுத்தும் முதல் மடிக்கணினி இதுவாகும், எனினும் நிறுவனம் தனது ரெட்மி மற்றும் எம்ஐ சீரிஸ் மடிக்கணினிகளை சீனாவில் சில காலமாக விற்பனை செய்து வந்தது.
அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாக உள்ள எம்ஐ நோட்புக்கில், 12 மணி நேர பேட்டரி திறன் கொண்டுள்ளதை முன்னிலைப்படுத்தி சியோமி நிறுவனம் ஏழு வினாடிகள் கொண்ட ஒரு டீஸர் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. வரவிருக்கும் இந்த நோட்புக்கின், பேட்டரியை பரிந்துரைக்கும் வகையில் 12 மணிநேரம் நகரும் கடிகாரம் அந்த வீடியோவில் காட்டப்படுகிறது.
#MakeEpicHappen without running????♂️for a charger???? every now and then.
— Mi India (@XiaomiIndia) June 4, 2020
Mi fans, guess the #Epic Battery Life on the upcoming #MiNoteBook. ????
Global Debut on June 1⃣1⃣. pic.twitter.com/GlSMXb2154
எம்ஐ நோட்புக்கில் “எபிக்” பேட்டரி செயல்திறன் இருக்கும் என்றும் டீஸரில் தெரிவிக்கப்படுகிறது. எனினும், ஆப்பிள் மற்றும் டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் மடிக்கணினிகளில் இதேபோன்ற 12 மணி நேர பேட்டரி திறனை வழங்கி வருகிறது என்பதை முன்னிலைப்படுத்த வேண்டியது அவசியம்.
இதேபோல், இந்த வார தொடக்கத்தில், சியோமி நிறுவனம் மற்றொரு டீஸரை வெளியிட்டது, இது வரவிருக்கும் எம்ஐ நோட்புக் மாடலில் மிக துல்லிய திரையை கொண்டிருப்பதாக பரிந்துரைத்தது.
இந்திய சந்தையில் மலிவு விலையில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதில் சியோமி நிறுவனம் மிகவும் பிரபலமானது. எனினும், இந்த நிறுவனம் கடந்த மாதம் எம்ஐ 10ஐ அறிமுகப்படுத்தி ஒரு மாற்றத்தை கொண்டு வந்தது. அதன் விலை ரூ.49,999 ஆகும். ஆகவே, எம்ஐ நோட்புக் மக்களை ஈர்க்க ஒரு மலிவு விலை நோட்புக்காக அறிமுகப்படுத்துமா அல்லது பிரீமியம் விண்டோஸ் அடிப்படையிலான அல்ட்ரா நோட் புக்குகள் மற்றும் முந்தைய மேக்புக் ஏர் மாடல்களுக்கு எதிராக போட்டியிட அதே மாதிரியாக அறிமுகப்படுத்துமா என்பது பெரும் சுவாரஸ்யமானதாக உள்ளது.
சீனாவில், சியோமி பல்வேறு பிரிவுகளைப் பூர்த்தி செய்ய எம்ஐ லேப்டாப் மற்றும் ரெட்மிபுக் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. எனினும், அந்நிறுவனம் தனது மடிக்கணினி வர்த்தகத்தை இந்தியாவில் தயாரிக்கும் ஒற்றை எம்ஐ நோட்புக் மாடலுடன் தொடங்க திட்டமிட்டுள்ளது.
Is Mi 10 an expensive OnePlus 8 or a budget budget S20 Ultra? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Glaciers Speed Up in Summer and Slow in Winter, New Global Map Reveals
Be Dune Teen OTT Release: When, Where to Watch the Marathi Comedy Drama Series
Four More Shots Please Season 4 OTT Release: Where to Watch the Final Chapter of the Web Series