Apple நிறுவனம் தனது MacBook Pro-வை புதிய M5 Chip-உடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது
Photo Credit: Apple
புதிய மேக்புக் ப்ரோ 14.2-இன்ச் லிக்விட் ரெடினா ப்ரோ XDR டிஸ்ப்ளேவுடன் பொருத்தப்பட்டுள்ளது
ரொம்ப பவர்ஃபுல்லான MacBook Pro மாடலை புதிய M5 Chip-உடன் இந்தியால லான்ச் பண்ணியிருக்காங்க. இந்த புதிய லேப்டாப் ஒரு Workstation-ஆகவே செயல்படக்கூடிய அளவுக்கு சக்தி வாய்ந்தது! வாங்க, இதுல என்னென்ன மிரட்டலான அம்சங்கள் இருக்குன்னு பார்க்கலாம். முதலில் இந்த M5 Chip! இதுதான் இந்த லேப்டாப்போட மிகப்பெரிய பலம். இதுல 10-core CPU, 10-core GPU மற்றும் AI (Artificial Intelligence) வேலைகளைச் செய்யறதுக்காக ஒரு பவர்ஃபுல்லான 16-core Neural Engine இருக்கு. Apple சொல்றது என்னன்னா... போன M4 மாடலை விட, இது 3.5 மடங்கு வேகமான AI பெர்ஃபார்மன்ஸ் கொடுக்குமாம். அதோட, கிராஃபிக்ஸ் வேகம் கூட 1.6 மடங்கு அதிகரிச்சிருக்கு. நீங்க 3D ரெண்டரிங், ஹெவி வீடியோ எடிட்டிங்னு என்ன வேலை செஞ்சாலும், இது தண்ணி மாதிரி செஞ்சு முடிக்குமாம். அதுமட்டுமில்லாம, இதுல இருக்குற SSD ஸ்டோரேஜ் போன மாடலை விட ரெண்டு மடங்கு வேகமா இருக்கு!
இந்த லேப்டாப் 14.2-inch Liquid Retina XDR டிஸ்பிளேயோட வந்திருக்கு. இந்த டிஸ்பிளே 120Hz ProMotion ரெஃப்ரெஷ் ரேட்டை சப்போர்ட் பண்ணும். அதாவது, நீங்க ஸ்க்ரோல் பண்ணாலும், வீடியோ பார்த்தாலும் செம ஸ்மூத்தா இருக்கும். கலர்கள் துல்லியமா, பிரகாசமா தெரியும். சில வாடிக்கையாளர்கள், டிஸ்பிளேயை நானோ-டெக்ஸ்ச்சர் ஃபினிஷ் (Nano-texture finish) ஆப்ஷன்லயும் வாங்கலாம். லேப்டாப்போட டிசைன்ல Space Black மற்றும் Silver என ரெண்டு கலர் ஆப்ஷன்ஸ் கிடைக்குது.
இந்த MacBook Pro-ல இருக்க முக்கியமான விஷயம், இதோட பேட்டரி லைஃப். ஒரே சார்ஜ்ல கிட்டத்தட்ட 24 மணி நேரம் வரைக்கும் வீடியோ ஸ்ட்ரீமிங் பண்ணலாம்னு Apple சொல்றாங்க. அடேங்கப்பா! ஒரு நாள் முழுக்க சார்ஜ் பத்தி கவலையே இல்லைன்னு சொல்லலாம். கனெக்டிவிட்டியைப் பொறுத்தவரைக்கும், இதுல அதிவேகமான மூன்று Thunderbolt 5 போர்ட்கள், ஒரு HDMI போர்ட், மேக்சேஃப் 3 (MagSafe 3) சார்ஜிங் போர்ட், மற்றும் முக்கியமான SDXC கார்டு ஸ்லாட் (SD Card Slot) கூட இருக்கு. கிரியேட்டர்களுக்கு இது ஒரு பெரிய வரப்பிரசாதம்.
விலை மற்றும் விற்பனை தேதி!
புதிய MacBook Pro M5-இன் ஆரம்ப விலை (16GB RAM + 512GB SSD) ₹1,69,900.
மாணவர்களுக்கு Apple-இன் கல்வி ஸ்டோர் மூலமா ₹10,000 வரைக்கும் தள்ளுபடி கிடைக்குது. இந்த லேப்டாப் அக்டோபர் 22-ஆம் தேதி முதல் இந்தியாவுல விற்பனைக்கு வருது.
முடிவா, M5 சிப், 24 மணி நேர பேட்டரி, அதிரடி டிஸ்பிளேன்னு இந்த MacBook Pro ஒரு உண்மையான பவர்ஹவுஸ். உங்களுக்கு ஒரு மிகச்சிறந்த லேப்டாப் தேவைன்னா, இதை மிஸ் பண்ணாதீங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்