Photo Credit: iMac
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது 24-இன்ச் iMac டெஸ்க்டாப் பற்றி தான்.
ஆப்பிள் நிறுவனம் அதன் 24-இன்ச் iMac டெஸ்க்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் சமீபத்திய 3nm M4 சிப் மற்றும் 4.5K ரெடினா டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. Cupertino நிறுவனம் மேஜிக் கீபோர்டை டச் ஐடி, மேஜிக் மவுஸ் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் கூடிய மேஜிக் டிராக்பேட் துணைக்கருவிகளுடன் மேம்படுத்தியுள்ளது. ஆப்பிள் சிலிக்கான் சிப்செட் மூலம் இயங்கும் அதன் அனைத்து சமீபத்திய கணினிகளைப் போலவே, புதிய 24-இன்ச் iMac ஆனது புதிய ஆப்பிள் நுண்ணறிவு அம்சங்களை சப்போர்ட் செய்கிறது.
புதிய 24 இன்ச் iMac 8-கோர் CPU, 8-core GPU, 16GB RAM மற்றும் 256GB மெமரியுடன் கூடிய அடிப்படை மாடல் 1,34,900 ரூபாய் விலையில் கிடைக்கிறது. நீலம், பச்சை, ஆரஞ்சு, இளஞ்சிவப்பு, ஊதா, வெள்ளி, மஞ்சள் வண்ணங்களில் முன்கூட்டிய ஆர்டர் செய்யலாம். நவம்பர் 8 முதல் இந்தியாவிலும் பிற சந்தைகளிலும் விற்பனைக்கு வரும்.
16ஜிபி ரேம் +256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம்+512ஜிபி மெமரி மடல் 10-கோர் சிபியு, 10கோர் ஜிபியு கொண்ட மாடலை ரூ. 1,54,900 மற்றும் ரூ1,74,900 விலையில் வாங்கலாம். 24ஜிபி ரேம் மற்றும் 1டிபி மெமரி மற்றும் அதே 10-கோர் சிபியு மற்றும் 10கோர் ஜிபியு கொண்ட டாப்-ஆஃப்-லைன் மாடலின் விலை ரூ. 1,94,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட iMac ஆனது 24-இன்ச் 4.5K (4,480x2,250 பிக்சல்கள்) ரெடினா டிஸ்ப்ளே மற்றும் 500 nits இன் உச்ச பிரகாசத்துடன் உள்ளது. வாடிக்கையாளர்கள் நானோ-டெக்ஸ்ச்சர் மேட் கிளாஸ் ஃபினிஷ் மூலம் டிஸ்ப்ளேவை கட்டமைக்க முடியும் என்று ஆப்பிள் கூறுகிறது. இது 1080p வீடியோ சப்போர்ட் செய்யும் வெப் கேமராவுடன் வருகிறது.
ஆப்பிள் அதன் சமீபத்திய ஆல் இன் ஒன் கணினியை M4 சிப் மூலம் கட்டமைத்து உள்ளது. இது 8-கோர் CPU/8-core GPU மற்றும் 10-core CPU மற்றும் 10-core GPU விருப்பங்களில் கிடைக்கிறது. 32GB வரை ரேம் மற்றும் 2TB வரை மெமரியுடன் வருகிறது. M4 சிப்பில் 16-கோர் நியூரல் எஞ்சின் உள்ளது. இது அமெரிக்காவில் உள்ளசாதனங்களுக்கு சப்போர்ட் ஆகிறது. Apple Intelligence அம்சங்களுக்கான சப்போர்ட்டும் கிடைக்கிறது. இது 4.44kg வரை எடையுள்ளதாக இருக்கிறது. Wi-Fi 6E, ப்ளூடூத் 5.3, நான்கு தண்டர்போல்ட் 4/ USB 4 போர்ட்கள் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவை உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்