ஹூவேய் நிறுவனத்தின் மேட்புக் இ 2019, 4ஜி எல்.டி.ஈ வசதியுடன் ரிலீஸ் ஆனது. 850 ஸ்னாப்டிராகன் மூலம் பவரூட்டப்பட்டுள்ள இந்த மேட்புக், அதிவேக சார்ஜிங்கிற்கு ஏற்ற அமைப்புடன் சந்தைக்கு வருகிறது. கோப்புகளை வேகமாக பகிர்வதற்கும் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
டச் சென்சிட்டிவ் கொண்ட 2கே ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ள மேட்புக் இ 2019-ல், ப்ளூ லைட் ஃப்ல்டரிங் சப்போர்ட் இருக்கிறது. ஆடியோவிற்கு டால்பி வசதியுடன் டூயல் ஸ்பீக்கர் பொருத்தப்பட்டுள்ளது.
ஹூவேய் மேட்புக் இ 2019 விலை:
சீனாவில் மேட்புக் இ 2019 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மற்ற சந்தைகளில் இந்த தயாரிப்பு எப்போது வெளியிடப்படும் என்று தகவல் தெரிவிக்கப்படவில்லை. சீனாவில் சுமார் 41,000 ரூபாய்க்கும் மேட்புக் இ விற்பனை செய்யப்படுகிறது. இது அடிப்படை வகையின் விலையாகும். இந்த வகையில் 256 ஜிபி சேமிப்பு வசதி இருக்கும். 512 ஜிபி சேமிப்புத் திறன் கொண்ட வகை 51,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டைட்டானியம் ஆஷ் மற்றும் சார்ம் ப்ளூ நிறங்களில் இந்த மேட்புக் சந்தையில் கிடைக்கிறது. சீனாவில் தற்போது இந்த தயாரிப்பு ப்ரீ-புக்கிங் செய்யப்பட்டு வருகிறது.
மேட்புக் இ 2019 சிறப்பம்சங்கள்:
12 இன்ச் 2கே டிஸ்ப்ளேவுடன் வரும் இந்த மேட்புக், 160 டிகிரி பார்க்கும் ஆங்கில் பெற்றுள்ளது. குவால்கம் 850 ஸ்னாப்டிராகன், 8ஜிபி ரேம், ஆட்ரினோ 630 ஜிபியூ வசதிகளுடன் இருக்கிறது இந்த மேட்புக். 256 ஜிபி மற்றும் 512 ஜிபி சேமிப்பு வசதி ஆப்ஷன்களில் இது கிடைக்கின்றன.
மேட்புக் இ 2019, பின்புறத்தில் 13 மெகா பிக்சல் கேமரா மற்றும் முன்புறத்தில் 5 மெகா பிக்சல் கேமராக்களுடன் வருகிறது. மேட்புக் உடன், எம் பென் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. அது தேவையானால் தனியாக வாங்கப்பட வேண்டும். 10 மணி நேரம் வீடியோ ஓடினாலும், இந்த புதிய மேட்புக்-ல், சார்ஜ் நிற்கும் என்று ஹூவேய் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிவேக சார்ஜிங் மூலம் 90 நிமிடத்தில் மேட்புக், 0 சதவிகிதத்திலிருந்து 88 சதவிகிதம் வரை உயரும்.
4ஜி எல்.டி.ஈ கனெக்டிவிட்டிக்காக ஒரு நானோ சிம் ஸ்லாட் மேட்புக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. 3.5 எம்.எம் ஜாக்கியும் பொருத்தப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்