ஹெச்பி நிறுவனம், அதன் ஓமன் 15 லேப்டாப்-ல் புதிய அப்டேட் கொடுக்கப் போவதாக தெரிவித்து உள்ளது. இந்த புதிய லேப்டாப்பில் பல அட்டகாசமான வசதிகள் புதிதாக வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஓமன் 15, லேப்டாப் மொத்தத்தில் மெல்லியதாக இருக்கும். 8 வது தலைமுறை Intel Core i5+ மற்றும் Intel Core i7 ஆகிய ப்ராசஸர்கள் இதில் பொருத்தப்பட்டு உள்ளது. Nvidia GeForce GTX 1070 உடன் Max-Q GPU ஆகிய தொழில்நுட்ப வசதிகள் இந்த புதிய லேப்டாப்பில் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த லேப்டாப் அப்டேட்களுடன், கேமிங்கிற்கு பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் ஹெட்செட், கீபோர்டு, மௌசு மற்றும் பை ஆகியவையும் வெளியிடப்பட உள்ளன.
கடந்த வருடம் வெளியான ஓமன் லேப்டாப்பை போலவே தான் இந்த வருட லேப்டாப்பிலும் டிசைன் உள்ளது. அதில் பெரிதாக எந்த மாற்றத்தையும் மெனக்கெடவில்லை ஹெச்பி நிறுவனம். ஆனால், இந்த வருடத்தின் லேப்டாப் வெறும் 2.4 கிலோ தான் எடை கொண்டு உள்ளது. லேப்டாப் சூடாவதை தணிப்பதற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட ஃபேன்களை விட தற்போது பெரிய விசிறிகள் அட்டேச் செய்யப்பட்டு உள்ளன. 15.6 இன்ச் அளவு கொண்ட டிஸ்ப்ளேவில் ஜி-சின்க் தொழில்நுட்பமும் சேர்ந்து வருகிறது. இது 4K அளவிலான காட்சிகளை காண்பிக்கும் திறன் கொண்டது
இதன் விலை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட வில்லை. ஆனால், 979.99 டாலருக்கு இந்த புதிய லேப்டாப் சந்தையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு 66,100 ரூபாய் இருக்கும். இந்த ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் தேதி இந்திய சந்தைகளில் இந்த லேப்டாப் கிடைக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.