வரும் 27 ஆம் தேதியுடன் இந்த விற்பனை முடிவுக்கு வருகிறது
இந்த சேல் மூலம், குறைந்தபட்சம் 25 சதவிதம் லேப்டாப்களுக்குத் தள்ளுபடி இருக்கும் என்று ஃப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
ஃப்ளிப்கார்ட் நிறுவனம் ‘தி கிராண்டு கேட்ஜெட்ஸ் சேல்' விற்பனையை இன்று முதல் தொடங்குகிறது. இந்த விற்பனையில் லேப்டாப்கள், ஆடியோ, கேமிங், கேமராக்கள், ஸ்மார்ட் வீட்டுப் பொருட்கள், மொபைல் ஆக்ஸசரிஸ், பவர் பேங்க், டேட்டா ஸ்டோரேஜ், டேப்லெட்ஸ் உள்ளிட்ட பல மின் சாதனப் பொருட்களுக்கு தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. வரும் 27 ஆம் தேதியுடன் இந்த விற்பனை முடிவுக்கு வருகிறது. இந்த சேல் மூலம், குறைந்தபட்சம் 25 சதவிதம் லேப்டாப்களுக்குத் தள்ளுபடி இருக்கும் என்று ஃப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது. ஹெட்போன்ஸ் மற்றும் ஸ்பீக்கர்களுக்கு 70 சதவிகிதம் வரை தள்ளுபடி இருக்குமாம். 325 ரூபாயிலிருந்தே பவர் பேங்க் விலை ஆரம்பமாகிறது.
7வது தலைமுறை இன்டல் கோர் ப்ராசஸர், 4ஜிபி ரேம், 1டிபி எச்.டி.டி, டி.ஓ.எஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் கொண்ட ‘லெனோவோ ஐடியாபேட் 330' 17,990 ரூபாய்க்குக் கிடைக்கிறது. இதற்கு இ.எம்.ஐ ஆப்ஷனை ஃப்ளிப்கார்ட் கொடுக்கிறது. எச்.டி.எப்.சி கார்டு மூலம் இந்த லேப்டாப்பை வாங்கினால் 5 சதவிகிதம் கேஷ்-பேக்கையும் பெறலாம். அதேபோல ‘லெனோவோ ஐடியாபேட் 130' லேப்டாப், 20,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்த லேப்டாப்பில் வின்டோஸ் 10 ஹோம், ஏம்.எம்.டி டூயல் கோர் ஏ6 ப்ராசஸர், 4ஜிபி ரேம், 1 டிபி எச்.டி.டி. இந்த லேப்டாப்புக்கு நோ-காஸ்ட் இ.எம்.ஐ ஆப்ஷன் மற்றும் வங்கி ஆஃபர்கள் இருக்கின்றன.
மேலும் இன்டல் சிலிரோன் டூயல் கோர் ப்ராசஸர், 2ஜிபி ரேம், 500ஜிபி எச்டிடி வசதிகள் கொண்ட ‘ஏசர் அஸ்பயர் 3' லேப்டாப், 14,990 ரூபாய்க்குக் கிடைக்கும் என்று ஃப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது. இந்த லேப்டாப்புக்கு, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மற்றும் நோ காஸ்ட் இ.எம்.ஐ ஆப்ஷனையும் கொடுக்கிறது ஃப்ளிப்கார்ட்.
மிகவும் அதிக திறன் கொண்ட லேப்டாப்தான் உங்கள் விருப்பம் என்றால், ‘ஏசர் ஸ்விஃப்ட் 7', 72,990 ரூபாய்க்குக் கிடைக்கும். இதற்கும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மற்றும் இ.எம்.ஐ ஆப்ஷன் உள்ளன. இந்த லேப்டாப், வின்டோஸ் 10, 7வது தலைமுறை இன்டல் கோர் ஐ5 ப்ராசஸர், 8ஜிப் ரேம், 256ஜிப் எஸ் எஸ் டி உள்ளிட்ட வசதிகளைப் பெற்றுள்ளது. இன்னும் பல லேப்டாப்களுக்கு இந்த சிறப்பு சேலில் தள்ளுபடி இருக்கின்றன.
எம்.ஐ பேண்ட் - எச்.ஆர்.எக்ஸ் எடிஷன், 999 ரூபாய்க்குக் கிடைக்கும். கூகுள் ஹோம், 7999 ரூபாயில் வாங்க முடியும். இதற்கு நோ காஸ்ட் இ.எம்.ஐ ஆப்ஷனும் உள்ளது. மொபைல் ஸ்க்ரீன் எக்ஸ்பேண்டர்ஸ் 199 ரூபாயிலிருந்தும், டிசைனர் மொபைல் கவர்கள் 199 ரூபாயிலிருந்தும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல வயர்லெஸ் மொபைல் சார்ஜர்கள் 699 ரூபாயிலிருந்தும், ட்ரெண்டி பாப் ஹோல்டர்கள் 99 ரூபாயிலிருந்தும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆப்பிள் வாட்சுகள் 28,900 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. ஃபிட்பிட்ஸ் 7,499 ரூபாயிலிருந்து தொடங்கும். ஹானர் பேண்ட்ஸ் 2,249 ரூபாயிலிருந்து ஆரம்பமாகும். லெனோவோ பேண்ட்ஸ் 1,299 ரூபாயிலிருந்து விற்பனைக்கு இருக்கிறது.
கேமிங் வெறியர்கள், மார்வல் ஸ்பைடர்மேன்-ஐ, 2,149 ரூபாய்க்கு வாங்கலாம். சோனி ப்ளே ஸ்டேஷன், 32,290 ரூபாய்க்குக் கிடைக்கும். கேமிங் ஹெட்செட்கள் 699 ரூபாயிலிருந்து ஆரம்பமாகும். கேமிங் கீ-போர்டுகள் 1,299 ரூபாயிலிருந்தே கிடைக்கும்.
டேப்லெட்ஸ் பிரிவைப் பொறுத்தவரை, ஆப்பிள் ஐபேட் (6வது தலைமுறை), 128ஜிபி, 35,490 ரூபாய்க்குக் கிடைக்கும். 8ஜிபி சேமிப்பு வசதி கொண்ட அல்காடெல் 1டி7 டேப்லட், 4,299 ரூபாய்க்குக் கிடைக்கும். லெனோவோ டேப் எஸ்ஸன்ஷியல் 7,999 ரூபாயில் வாங்க முடியும். லெனோவோ ஃபேப்லெட்ஸ் 9,999 ரூபாய்க்குக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹானர் டேப்லெட்ஸ் 11,499 ரூபாயிலிருந்து ஆரம்பமாகிறது. லெனோவோ டேப்லெட்ஸ் 12,990 ரூபாயிலிருந்தே கிடைக்கும். சாம்சங் டேப்லெட்ஸ் 27,999 ரூபாயிலிருந்து வாங்க முடியும்.
கிராண்டு கேட்ஜெட்ஸ் சேல் குறித்து அனைத்து தள்ளுபடி விபரங்களையும் தெரிந்து கொள்ள, ஃப்ளிப்கார்ட் தனி பக்கத்தையே உருவாக்கியுள்ளது. அதில் முழ தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Nothing Phone 3a Lite Reported to Launch in Early November: Expected Price, Specifications
HMD Fusion 2 Key Features, Specifications Leaked Online: Snapdragon 6s Gen 4, New Smart Outfits, and More
Google Says Its Willow Chip Hit Major Quantum Computing Milestone, Solves Algorithm 13,000X Faster
Garmin Venu X1 With 2-Inch AMOLED Display, Up to Eight Days of Battery Life Launched in India