ASUS நிறுவனம் Vivobook S 16, S 15 மற்றும் S 14 என மூன்று புதிய மாடல் லேப்டாப்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்கனவே உள்ள தங்களது பிரபலமான Vivobook S சீரிஸ் லேப்டாப்பை புதுப்பித்துள்ளது. இந்த லேப்டாப்கள் அனைத்தும் OLED டிஸ்பிளேயுடன், பளிச்சென்ற வண்ணமயமான நிறங்களை கொண்டிருக்கிறது. பேஸிக் வீடியோ எடிட் போன்ற பொழுதுபோக்கிற்கு சிறந்த லேப்டாப்பாக இருக்கிறது.
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் கோபைலட் + லேப்டாப்பாக Asus Vivobook S 15 உள்ளது. இது மைக்ரோசாப்டின் Copilot+ PC சான்றிதழைக் கொண்ட நிறுவனத்தின் முதல் சாதனமாகும். இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் எக்ஸ் எலைட் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. விண்டோஸ் 11 மற்றும் வரவிருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களுக்கான சப்போர்ட் இருக்கிறது.
இந்தியாவில் Asus Vivobook S 15 OLED (S5507) விலை 1,24,990 ரூபாய். 16GB RAM+1TB SSD சேமிப்பகத்துடன் அறிமுகமாகி உள்ளது. Flipkart , Asus e-shop, Asus பிரத்தியேக கடைகள் மற்றும் Pegasus கடைகள் வழியாக கிடைக்கிறது.
Asus Vivobook S 15 OLED ஆனது Windows 11 Home மூலம்இயங்குகிறது. Microsoft Office Home & Student 2021 உள்ளது. 15-இன்ச் 3K (2,880 x 1,620 பிக்சல்கள்) OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. ஷட்டர் மற்றும் அகச்சிவப்பு (IR) கதிர் திறன்களுடன் 1080p வெப்கேமரைக் கொண்டுள்ளது.
Asus Vivobook S 15 OLED லேப்டாப் Qualcomm Snapdragon X Elite சிப்செட் உடன் Qualcomm AI இன்ஜின், Adreno GPU மற்றும் Qualcomm Hexagon neural processing unit (NPU) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சிப்செட் 16GB LPDDR5X ரேம் மற்றும் 1TB NVMe SSD சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
அலுமினிய மூடி, நம்பர் கீ மற்றும் RGB கொண்ட கீ போர்டு லைட் உள்ளது. AI PC என்பதால், பிரத்யேக Copilot கீ கொண்டுள்ளது. கூடுதலாக ஹர்மன் கார்டனால் டியூன் செய்யப்பட்ட இன்பில்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் மைக்ரோஃபோன் வசதியுடன் வந்துள்ளது.
Asus Vivobook S 15 OLED லேப்டாப் 3 செல் 70Whr திறன் கொண்ட Li-ion பேட்டரியைக் கொண்டுள்ளது. இதனை 90W AC அடாப்டரைப் பயன்படுத்தி சார்ஜ் செய்ய முடியும். புளூடூத் 5.4 மற்றும் Wi-Fi 7 இணைப்பை வழங்குகிறது. இது இரண்டு USB 3.2 Gen 1 Type-A போர்ட்கள், இரண்டு USB 4.0 Type-C போர்ட்கள், ஒரு HDMI 2.1 போர்ட் மற்றும் ஒரு 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ரீடரையும் கொண்டுள்ளது. 352.6x227x15.9 மிமீ சைஸ்சில் 1.42 கிலோ எடை கொண்டதாக உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்