உணவு பாதுகாப்புக்காக 'சோமேட்டோ' நிறுவனம் எடுத்த புதிய முயற்சி!

விளம்பரம்
Written by Harpreet Singh மேம்படுத்தப்பட்டது: 21 மார்ச் 2019 19:07 IST
ஹைலைட்ஸ்
  • இனி உணவு 100% பாதுகாப்பானதாக இருக்கும் என சோமேட்டோ நிறுவனம் அறிவிப்பு!
  • 10 நகரங்களில் வெளியாகும் புதிய பேக்கிங் முறை!
  • இதன் மூலம் உணவு பாதுகாப்பாக வாடிக்கையாளரை சென்றடையும் என நம்பிக்கை!

இந்தப் புதிய திட்டத்தின் மூலம் சுமார் 5,000 உணவகங்கள் இனி சீல்டு பேக்குகளில் மட்டுமே உணவை வழங்க உள்ளனர்.

Photo Credit: சோமேட்டோ

சோமேட்டோ உணவு  டெலவரி நிறுவனத்தின் டெலவரி எக்சிக்கியூடிவ் ஒருவர், வாடிக்கையாளருக்கு கொண்டு சென்ற உணவை எடுத்து உண்ணும் வீடியோ ஆன்லைனில் வைரலானது.

இந்த வீடியோ காட்சி ஆன்லைன் உணவு வாங்குபவர்கள் மற்றும் பொது மக்களிடேயே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சோமேட்டோ நிறுவனம் இதுபோன்ற பிரச்னைகள் இனி வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்திருந்தது. 

அதையொட்டி தற்போது சோமேட்டோ நிறுவனம், சாப்பாடு பொட்டலங்களை திறக்க முடியாத வகையில் ஒரு புதிய பேக்கிங் முறையை அறிமுகம் செய்துள்ளது. சோமேட்டோ நிறுவனத்தின் இந்தப் புதிய பேங்கிங் முறை பாலிமரால் செய்யப்பட்ட ஒரு திரையைக் கொண்டுள்ளது. இரண்டு விதமாக வெளியாகியுள்ள இந்தப் புதிய பேக்கிங் கவர் சிறு மற்றும் பெரிய உணவு பார்சல்களை பாதுகாப்பாக மூட உதவுகிறது.

டெலிவரி நபரிடம் உணவைத் தருவதற்கு முன்னர் உணவகத்தில் வைத்து இந்தப் புதிய பேக்கிங் செய்யப்படுகிறது. இந்த சீலை வாடிக்கையாளர் கிழித்த பின்னர்தான் உணவைச் சாப்பிட முடியும். இதனால் டெலிவரி நபர்கள் பார்சல்களை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சோமேட்டோ நிறுவனம், உணவுப் பொட்டலங்கள் திறந்து காணப்பட்டால் உடனடியாக தங்களுக்குப் புகார் அளிக்கும்படி வாடிக்கையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குருகிராம் நகரத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையின் வெற்றிக்குப் பிறகு இந்தத் திட்டம் இந்தியாவின் 10 நகரங்களில் அமல்படுத்தப்படுகிறது. இந்தியாவில் முதற்கட்டமாக டெல்லி என்சிஆர், மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, பூனே, ஜெய்ப்பூர், சண்டிகர், நாக்பூர் மற்றும் வடோதரா போன்ற நகரங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அடுத்தக்கட்டமாக சோமேட்டோ டெலிவரி இயங்கும் 180 நகரங்களிலும் இந்தப் புதிய திட்டம் அமல்படுத்தப்படும்.

இந்தப் புதிய திட்டத்தின் மூலம் சுமார் 5,000 உணவகங்கள் இனி சீல்டு பேக்குகளில் மட்டுமே உணவை வழங்க உள்ளனர். இதன் மூலம் 100% உணவுப் பாதுகாப்பை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க முடியும் என சோமேட்டோ தெரிவித்தது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Zomato, Food Delivery App
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சீனா டெலிகாம் பட்டியலில் ஒன்பிளஸ் 15T: முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் வடிவமைப்பு தகவல் வெளியானது
  2. கிரின் 8000 சிப் மற்றும் 50-மெகாபிக்சல் கேமராவுடன் ஹவாய் என்ஜாய் 90 பிளஸ், என்ஜாய் 90 புரோ மேக்ஸ் அறிமுகம்
  3. AI+ நோவா 2 5G மற்றும் நோவா 2 அல்ட்ரா 5G ஏப்ரல் 9ல் இந்தியாவில் அறிமுகம்: அமைப்பு மற்றும் நிறங்கள் வெளியானது
  4. A18 சிப் மற்றும் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் வசதியுடன் கூடிய ஆப்பிளின் அடிப்படை ஐபேட் 2026-ன் முதல் பாதியில் வெளியாக வாய்ப்பு
  5. 50-மெகாபிக்சல் கேமராவுடன் ரியல்மி 16 5G விரைவில் இந்தியாவில் அறிமுகம்: பிளிப்கார்ட் வழியாக விற்பனை
  6. விவோ V70 FE இந்திய வருகை உறுதி: 200 மெகாபிக்சல் கேமரா இடம்பெறுவது உறுதியானது
  7. விவோ X300 அல்ட்ரா மற்றும் ஒப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா விலை: ஷாவோமி 17 அல்ட்ராவை விட விலை அதிகமாக இருக்கலாம்
  8. ஆண்ட்ராய்டின் 24 மணிநேரக் காத்திருப்பினைத் தவிர்த்து, மூன்றாம் தரப்பு செயலிகளை (Third-Party Apps) நிறுவுவது எப்படி?
  9. 9,000mAh பேட்டரி, 50-மெகாபிக்சல் கேமராவுடன் போக்கோ X8 புரோ தொடர் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை மற்றும் சலுகைகளை இங்கே காணலாம்
  10. ஒன்பிளஸ் 15T: அறிமுக தேதி, எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் சிறப்பம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.