நினைத்ததை எல்லாம் தள்ளுபடி விலையில் வாங்கலாம்

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 15 செப்டம்பர் 2024 10:37 IST
ஹைலைட்ஸ்
  • Amazon Prime membership உள்ளவர்கள் முன்கூட்டியே பெறலாம்
  • கூடுதல் கேஷ்பேக் சலுகைகளும் கிடைக்கிறது
  • Amazon Pay மூலம் வாங்கினால் தள்ளுபடி கூப்பனும் வரும்

Amazon Great Indian Festival 2024 sale will offer discounts on mobiles, electronics and more

Photo Credit: Amazon

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Amazon Great Indian Festival 2024 பற்றி தான்.

Amazon Great Indian Festival 2024 தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. Amazon Prime membership உள்ளவர்கள் முன்கூட்டியே தொடங்க உள்ளது. Amazon Pay மூலம் வாங்கினால் தள்ளுபடி கூப்பனும் வரும். கூடுதல் கேஷ்பேக் சலுகைகளும் கிடைக்கிறது. சரியான தேதிகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், அமேசான் அதன் இணையதளத்தில் சில தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

லேப்டாப்களுக்கு 45 சதவீதம் வரை தள்ளுபடியையும், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆக்சஸெரீஸ்களில் 75 சதவீதம் வரை தள்ளுபடியும் கிடைக்கிறது. கூடுதலாக, பிரைம் மெம்பர்களுக்கும், எஸ்பிஐ கார்டு பயனர்களுக்கு கூடுதல் சலுகை கிடைக்கும்.

Amazon Great Indian Festival 2024 விற்பனைக்காக புதிய வெப்சைட் தொடங்கியுள்ளது. எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோக பொருட்கள், மொபைல்கள் மற்றும் கேமிங் சாதனங்கள் போன்ற பல்வேறு தயாரிப்பு வகைகளில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. Apple , Samsung , Dell, Amazfit, Sony மற்றும் Xiaomi போன்ற பெரிய பிராண்டுகளின் சாதனங்கள் கணிசமான விலைக் குறைப்புகளைப் பெறுகிறது. கூடுதலாக Boat போன்ற இந்திய பிராண்டுகளின் தயாரிப்புகளுக்கும் தள்ளுபடிகள் வழங்கப்பட உள்ளது. அமேசான் Great Indian Festival 2024 விற்பனையின் போது அலெக்சா, ஃபயர் டிவி மற்றும் கிண்டில் சாதனங்கள் போன்ற தயாரிப்புகள் குறைந்த விலையில் கிடைக்கும்.

எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடியை அனுபவிக்க முடியும். டேப்லெட்டுகளில் 60 சதவீதம் வரை, மொபைல்கள் மற்றும் ஆக்சஸரிகளில் 40 சதவீதம் வரை, ஹெட்ஃபோன்களுக்கு 70 சதவீதம் வரை, ஸ்மார்ட் டிவிகள் மற்றும் புரொஜெக்டர்களில் 60 சதவீதம் வரை தள்ளுபடி, கேமிங் கன்சோல்கள் மற்றும் பிற பொருட்கள் மீது 70 சதவீதம் வரை சலுகைகளை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

எலக்ட்ரானிக்ஸ் தவிர, விமான டிக்கெட்டுகள், ரயில் மற்றும் பஸ் கட்டணம், ஹோட்டல் முன்பதிவுகள் உள்ளிட்ட பயண முன்பதிவுகளிலும் வாடிக்கையாளர்கள் தள்ளுபடியைப் பெற முடியும் என்று அமேசான் அறிவித்துள்ளது.
Amazon Prime மெம்பர்ஷிப் உள்ள வாடிக்கையாளர்கள் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2024 விற்பனைக்கு முன்கூட்டியே சலுகைகளை பெறுவார்கள். அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் இருந்தால் ஒரு நாள் முன்னதாகவே அனைத்து சலுகைகளையும் நீங்கள் பெறலாம். கூடுதல் கேஷ்பேக் சலுகைகள் மற்றும் நீட்டிக்கப்பட்ட நோ-காஸ்ட் EMI விருப்பங்களும் இதில் இருக்கும். மேலும், அமேசான் பே மற்றும் பே லேட்டர் அடிப்படையிலான கட்டண சலுகைகள் மற்றும் கூப்பன் தள்ளுபடிகள் விற்பனையின் போது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

 ...மேலும்
        
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Vivo Y400 5G லான்ச்! Snapdragon 4 Gen 2 SoC-வோட கலக்கப் போகுது!
  2. Amazon சேல்ல லேப்டாப் வாங்க இதுதான் சரியான நேரம்! ரூ. 60,000-க்குள்ள டாப் பிராண்டுகளின் மாஸ் டீல்ஸ்!
  3. Motorola G86 Power 5G: ஒருமுறை சார்ஜ் போட்டா மூணு நாள் வரும்! அம்சங்கள் கேட்டா அசந்து போவீங்க!
  4. கேமர்களுக்கு ஒரு குட் நியூஸ்! Acer Nitro Lite 16 லேப்டாப் வந்தாச்சு! விலை கேட்டா ஷாக் ஆவீங்க!
  5. இந்த போன் சார்ஜ் போட்டா போதும்... மூணு நாள் வரும்! Oppo Find X9 Pro-வின் மிரட்டல் அம்சங்கள்!
  6. ஐபோன் 17 வாங்க காத்திருப்போர்க்கு சூப்பர் நியூஸ்! புதிய கலர்களில் ஜொலிக்கப் போகுது
  7. Vivo Y31 5G: இந்தியால கெத்து காட்ட வருதா? என்னலாம் எதிர்பார்க்கலாம்?
  8. அறிமுகமாகிறது Primebook 2 Neo: 8GB RAM, Full HD டிஸ்ப்ளே - வாங்கலாமா?
  9. சாம்சங் போன்களில் பூட்லோடர் லாக்? One UI 8-ல் புதிய சிக்கல் - உங்கள் போன் பாதிக்கப்படுமா?
  10. Oppo Reno 14FS 5G: ₹45,700 விலையில் அறிமுகமா? அசத்தல் டிசைன், Snapdragon 6 Gen 4 SoC உடன் கசிந்த தகவல்கள்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.