சோனி நிறுவனத்தின் Bravia X9000F தொடர் தொலைக்காட்சிகளான KD-85X9000F, KD-65X9000F மற்றும் KD-55X9000F ஆகியவை இந்தியாவில் வெளியாகி உள்ளன. இந்த டிவி-க்கள் முறையே 12,99,900, 3,39,900 மற்றும் 2,39,900 ரூபாய்களில் சந்தையில் கிடைக்கும். இதில் KD-85X9000F, 85 இன்ச் நீளம் உடையது. KD-65X9000F 65 இன்ச் அளவு கொண்டது. அதேபோல, KD-55X9000F 55 இன்ச் நீளமானது. இரண்டு தொலைக்காட்சிகளும் 4K HDR க்வாலிட்டியில் சேனல்களை காண்பிக்கும் என்பதால் இதனைப் பார்பபது மெய் சிலிர்க்க வைக்கும் அனுபமவமாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த டிவி-க்களில் TRILUMINOS டிஸ்ப்ளே பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகிய வண்ணங்கள் கச்சிதமான அளவில் தெரியும்.
ஆண்ட்ராய்டு 7.0 ஆபரேட்டிங் மென்பொருளும் இந்த டிவியில் இன்-பில்டாக வருகிறது. இதன் மூலம், மற்ற ஸ்மார்ட் மின்னணு பொருட்களுடனும் மிகச் சுலபமாக இணைக்க முடியும். நெட்ஃபிளிக்ஸ் மற்றும் கூகுள் ப்ளே ஆகியவற்றுக்கு செல்லும் வகையில், இந்த டிவி-யில் பட்டன் கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால், நேரடியாக அந்தத் தளத்துக்கு செல்ல முடியும்.
மேலும் இந்த Bravia X9000F டிவி-க்களில் Wi-Fi 802.11ac, ப்ளூடூத் 802.11ac, ப்ளூடூத் v4.1, HDMI போர்ட்கள், மூன்று யூ.எஸ்.பி போர்ட்கள், மற்றும் ஈதர்நெட் ஆகிய தொழில்நுட்ப வசதிகளும் கொடுக்கப்பட்டு உள்ளன. 16 ஜிபி கொண்ட உட் சேமிப்பு வசதியும் இந்த டிவி-யில் உள்ளது.
இந்த தொலைக்காட்சியில் X-Motion Clarity என்ற பிரத்யேக தொழில்நுட்பம் உள்ளது. அதன் மூலம் அதிவேகமாக நகரும் சீன்களில் இருக்கும் மோஷன் ப்ளர்-ஐ போக்கி துள்ளியமான காட்சிகளை காட்ட முடியும். இதனால், சினிமா தியேட்டர்பகளில் பார்ப்பது போல ஒரு உணர்வு வரும். இப்படி பற்பல விஷேச வசதிகளை இந்த புதிய சோனி தொலைக்காட்சிகள் கொண்டுள்ளன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்