'ஒன்ப்ளஸ்' அடுத்து டிவிக்களை அறிமுகப்படுத்தப்போகிறதா?

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 24 ஜூன் 2019 13:11 IST
ஹைலைட்ஸ்
  • ஒன்பிளஸ் விரைவில் டிவிக்களை அறிமுகப்படுத்தப்போவதாக இஷான் அகர்வால் தகவல்
  • கடந்த ஆண்டு செப்டம்பரிலேயே ஒன்ப்ளஸ் நிறுவனம் டிவி குறித்த அறிவிப்பு
  • ஒன்ப்ளஸின் முதல் டிவி விரைவில் அறிமுகமாகலாம்

'ஒன்ப்ளஸ்' என்ற பெயரிலே பிரீமியம் டிவிக்கள்

விரைவில் ஒன்ப்ளஸ் டிவிக்கள் அறிமுகமாகலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டே ஒன்ப்ளஸ் நிறுவனம் ஸ்மார்ட் டிவிக்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவலை வெளியிட்டிருந்தது. அதன்பின் இது குறித்து எந்த அறிவிப்பையும் அந்த நிறுவனம் வெளியிடாத நிலையில், தற்போது இந்த நிறுவனம் 'ஒன்ப்ளஸ்' என்ற பெயரிலே பிரீமியம் டிவிக்களை அறிமுகப்படுத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஒருவேளை, ஒன்ப்ளஸ் நிறுவனம் டிவிக்களை அறிமுகப்படுத்தினால் தற்போது இந்தியா மற்றும் சீனாவில் அறிமுகமாகி மக்களிடையே மிகுத்த வரவேற்பை பெற்றுள்ள குறைந்த விலையை கொண்ட 'சியோமி ஸ்மார்ட் டிவி' சந்தைக்கு ஆபத்தாக அமையலாம். 

தொழில்நுட்ப துறையில் பல விவரங்களை முன்கூட்டியே வெளியிடும் தொழில்நுட்ப வல்லுனரான இஷான் அகர்வால், இது குறித்த தகவலையும் வெளியிட்டுள்ளார். ட்விட்டரில் இதுகுறித்து இவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், ஒன்ப்ளஸ் நிறுவனம் விரைவில் டிவிக்களை அறிமுகப்படுத்தவுள்ளது எனக் கூறியுள்ளார். இது இந்தியாவை மையமாக வைத்து அறிமுகமாகவுள்ளதா இல்லை உலகம் முழுவதும் அறிமுகமாகவுள்ளதா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. 

முன்னதாகவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஒன்ப்ளஸ் தலைமை நிர்வாக அதிகாரியான பெடே லா, ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் டிவி தயாரிப்பு குறித்த தகவலை வெளியிட்டிருந்தார். அவர் ஒன்ப்ளஸ் நிறுவனம் பிரீமியம் டிவிக்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இவர் ஊடகங்களுக்கு அளித்த ஒரு நேர்காணலில்,"செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன், எங்கள் கற்பனை அளவற்றது, நாங்கள் வருங்காலம் நோக்கிய பயணத்தில் உள்ளோம்." என்று அவர் கூறியிருந்தார்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: OnePlus TV, OnePlus
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இனி ஃபோல்டபிள் போன்லயும் தத்ரூபமான போட்டோஸ்! சாம்சங் Z Fold 8-ன் மிரட்டலான கேமரா சிறப்பம்சங்கள் கசிந்தது
  2. ஆப்பிள், குவால்காமுக்கு செம டஃப்! சாம்சங்கின் 2nm எக்ஸினோஸ் 2600 வந்தாச்சு
  3. 8.9mm தடிமன்.. 10 நாள் பேட்டரி! ஒன்பிளஸ் வாட்ச் லைட் (OnePlus Watch Lite) லான்ச் ஆகிடுச்சு
  4. 200MP கேமரா.. ஆனா சைஸ் ரொம்ப சின்னது! OPPO Reno15 Pro Mini - இதோட டிசைனை பார்த்தா அசந்துடுவீங்க
  5. வந்துவிட்டது புது Oppo Pad Air 5: 2.8K Display, 10,050mAh Battery & 5G Support
  6. அமேசான் பே-வில் அதிரடி! ₹5,000 வரை பேமெண்ட் பண்ண இனி பின் நம்பர் போட வேணாம்
  7. 7000mAh பேட்டரி.. 200MP கேமரா.. ரியல்மி 16 ப்ரோ+ (Realme 16 Pro+) ரகசியங்கள் அம்பலம்
  8. இனி ஆப் ஸ்டோர்ல எதை தேடினாலும் விளம்பரமா தான் இருக்கும்! ஆப்பிள் எடுத்த அதிரடி முடிவு! கடுப்பில் யூசர்கள்
  9. 5G சப்போர்ட்.. 12.1-இன்ச் டிஸ்ப்ளே! வந்துவிட்டது புது OnePlus Pad Go 2! விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க
  10. 7,400mAh பேட்டரியா? ஒன்பிளஸ் வரலாற்றிலேயே மிகப்பெரிய பேட்டரியுடன் வந்துவிட்டது OnePlus 15R
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.